Kushboo: என் கணவர் மேல யாரும் கண்ணு வைக்காதீங்க.. மதகஜராஜா பிரீமியர் ஷோவில் குஷ்பூ குஷி!

சென்னை: நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2012ம் ஆண்டில் உருவான மதகஜராஜா படம், 12 ஆண்டுகள் கழித்து இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியானது.

இந்நிலையில் குறைந்த நாட்களிலேயே படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக செய்து முடித்துள்ளனர். நேற்றைய தினம் படத்தின் பிரிமியர் ஷோவும் சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் சுந்தர் சி, வரலட்சுமி சரத்குமார், விஷால், குஷ்பூ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு படம் குறித்து பல்வேறு பகிர்வுகளை மேற்கொண்டனர்.

kushboo sundar c madha gaja raja movie


மதகஜராஜா படம்: நடிகர் விஷால், வரலஷ்மி சரத்குமார், சந்தானம், அஞ்சலி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்துள்ள மதகஜராஜா படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 2012லேயே இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு 2013ல் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படம் முடங்கியது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் அடுத்தடுத்து படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிப்போனது.

மதகஜராஜா ப்ரீ ரிலீஸ் நிகழ்வு: இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. பொங்கல் ரேஸில் இருந்து அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியேறிய நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக மதகஜராஜா படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு ப்ரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டனர். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடந்த படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் மிகவும் தளர்வாக காணப்பட்டார். மைக்கை பிடித்து பேசக்கூட தெம்பில்லாமல் நடுங்கியபடி இருந்தார். அவரது இந்த லுக் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை வேதனை பட செய்தது.

உடல்நிலை தேறிய விஷால்: விஷாலின் இந்த பிரச்சனைக்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து விஷால் மட்டுமில்லாமல் மதகஜராஜா படமும் கவனம் பெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை குஷ்பூவை விஷால் கட்டியணைத்ததும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் பிரீமியர் ஷோ சென்னை சத்யம் திரையரங்கில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற விஷால் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இருந்ததைப் போல இல்லாமல் தெம்பாகவே காணப்பட்டார். தன்னுடைய உடல்நிலை தற்போது சரியானதாக அவர் கூறியிருந்தார்.

குஷ்பூ உற்சாகம்: இந்த நிகழ்ச்சியிலும் குஷ்பூவை அவர் கட்டியணைத்து உற்சாகத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பூ 12 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த படத்தை தன்னுடைய கணவரும் இயக்குநருமான சுந்தர் சி சிறப்பாக கொடுத்துள்ளதாக தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். சுந்தர் சியின் இந்த படத்திற்கான உழைப்பு குறித்து தனக்கு தெரியும் என்றும் மற்றபடி இந்த படத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் குஷ்பூ குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சுந்தர்சியை பார்த்து யாரும் கண் வைக்க வேண்டாம் என்றும் வீட்டிற்கு சென்றதும் தன்னுடைய அத்தையை வைத்து அவருக்கு திருஷ்டி சுத்தி போட வேண்டும் என்றும் குஷ்பூ பெருமையுடன் பேசியதை பார்க்க முடிந்தது.

என்டர்டெயின்மெண்ட் கிங்: சுந்தர் சியை என்டர்டெயின்மெண்ட் கிங் என்று கூறுவார்கள் என்று குறிப்பிட்ட குஷ்பூ, அதை தன்னுடைய படங்களின் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 12 வருஷத்திற்கு முன்னதாக சுந்தர் சி இந்தப் படத்திற்காக கொடுத்த உழைப்பிற்கு தற்போது ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருவதாகவும் குஷ்பூ நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தற்போது எடுக்கப்பட்ட படம் போலவே மதகஜராஜா காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X