Kushboo: வாரிசு பட சூட்டிங்கின்போது நானும் விஜய்யும் அழுதுட்டோம்.. குஷ்பூ எமோஷனல்!

சென்னை: நடிகை குஷ்பூ தொடர்ந்து பல ஆண்டுகளாக ஹீரோயினாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார். ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த குஷ்பூ, இயக்குனர் சுந்தர் சியை காதலித்து மணம் புரிந்து கொண்டவர்.

சுந்தர் சி -குஷ்பூ தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போதும் குஷ்பூ படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்திருந்தது. படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருந்தார்.

Vijay Varisu movie Kushboo Vamsi tamil cinema

நடிகை குஷ்பூ: நடிகை குஷ்பு 90களின் நாயகியாக தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வரும் குஷ்பூ, சமீபத்தில் அரண்மனை 4 படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் அவரது கணவர் சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது.

அரண்மனை 4 தயாரிப்பாளர்: அரண்மனை 4 படத்தை தொடர்ந்து அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் அதுவும் அவரது சொந்த தயாரிப்பிலேயே உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, நடிகை குஷ்பூ டான்ஸ் மாஸ்டர் கலாவுடன் இணைந்து தொடர்ந்து பேட்டிகளை கொடுத்துள்ளார். அதில் நடிகர் விஜய்யுடன் தான் இணைந்து நடித்த வாரிசு படம் குறித்த தன்னுடைய நினைவுகளை குஷ்பூ பகிர்ந்து கொண்டுள்ளார். வாரிசு படத்தில் விஜய்க்கும் தனக்குமான காட்சிகள் மிகச் சிறப்பாக தனியான மற்றும் அழகான ட்ராக்கில் அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூட்டிங்கின்போது அழுத விஜய் -குஷ்பூ: இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது எமோஷனலான பல காட்சிகளில் இணைந்து நடித்த தானும் விஜய்யும் சில காட்சிகளில் அழுதுவிட்டதாகவும் குஷ்பூ தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் நீளம் கருதி இந்த காட்சிகள் டெலிட் செய்யப்பட்டதாகவும் குஷ்பூ தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் வம்சி மிகுந்த மன வருத்தத்துடன் தன்னிடம் நிலைமையை விளக்கியதாகவும் தானும் ஒரு கண்டிஷனுடன் தன்னுடைய காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய ஒரு சிங்கிள் காட்சி கூட படத்தில் இடம் பெறக் கூடாது என்றும் டெலிட் செய்தால் மொத்தமாக டெலிட் செய்து விட வேண்டும் என்றும் ஒரு புகைப்படம் கூட தன்னுடையது படத்தில் இடம்பெறக்கூடாது என்றும் குஷ்பூ நிபந்தனையுடன் தன்னுடைய டிராக்கை டெலிட் செய்ய ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் மட்டும் காம்பினேஷன்: இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் மிகச்சிறப்பானது என்றும் விஜய்க்கும் தனக்கும் மட்டும்தான் படத்தில் காம்பினேஷன் காட்சிகள் என்றும் அதனால் தான் நினைத்தவுடன் இந்த டிராக்கை டெலிட் செய்ய முடிந்தது என்றும் குஷ்பூ குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் வாரிசு படத்தின் ரிலீசுக்கு பிறகு தானும் விஜய்யும் சந்தித்துக் கொண்ட போது கூட இந்த கேரக்டர் குறித்து அவர் மிகவும் சிலாகித்து பேசியதாகவும் குஷ்பூ, கலா மாஸ்டர் உடனான தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். வாரிசு படத்தில் குஷ்பூ இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவரது காட்சிகள் படத்தில் இடம் பெறாதது ரசிகர்களை அந்த நேரத்தில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. அந்த வருத்தத்தை தற்போது குஷ்புவும் தனது பேட்டியில் பதிவிட்டுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X