குஷ்பூவுக்கு நடந்த பாலியல் தொல்லை.. நடந்தது என்ன தெரியுமா?

சென்னை: நடிகை குஷ்பூ தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் சொன்னதை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல் என 80களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

சென்சேஷ்னல் ஆன குஷ்பூ

சென்சேஷ்னல் ஆன குஷ்பூ

மும்பையை பூர்வீகமாகக் கொண்டாலும் குஷ்பூ தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழை முறையாக கற்றுகொண்டவர். தனது சொந்த குரலில் வெகு விரைவிலேயே டப்பிங்கும் பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ரவுண்டு கட்டி வலம் வந்தவர் குஷ்பூ. தமிழ்நாட்டில் குஷ்பூ இட்லி எனும் அளவுக்கு சென்சேஷ்னல் ஆனவர். அதிலும் தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் கூறும் குணம் உடைய குஷ்பூ ஏகப்பட்ட விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். இருப்பினும் அதனை காதில் ஏற்றிக்கொள்ளாதவர். இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்ட குஷ்பூவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

அப்பா செய்த பாலியல் துன்புறுத்தல்

அப்பா செய்த பாலியல் துன்புறுத்தல்

எனது அப்பா அவரது ஒரே மகளான என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். அது அவரது பிறப்புரிமை போல் நினைத்துக்கொண்டிருந்தார். எனக்கு 8 வயதாகும்போது என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார். நான் இதை வெளியே சொன்னால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எனக்குள் இருந்தது. அதனால் பல ஆண்டுகள் அமைதியாக இருந்தேன்.

முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது

முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது

எனது அப்பாவுக்கு எதிராக துணிச்சலுடன் பேச ஆரம்பிக்கும்போது எனக்கு வயது 15. இதற்கு முன்னதாக அப்பா செய்த பாலியல் துன்புறுத்தலை சொன்னால் அம்மா நம்பவில்லை என்றால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. கணவர்தான் எல்லாம் என்ற மனப்பான்மையில் என் அம்மா இருந்தார். ஒருகட்டத்தில் இனியும் தாங்க முடியாது என்ற நிலையில் வெளிப்படையாக பேசினேன். எனக்கு 16 வயது இருக்கும்போது எங்களிடம் இருந்து அவர் பிரிந்து சென்றார்.

என்ன நடந்தாலும் சரி போராட வேண்டும்

என்ன நடந்தாலும் சரி போராட வேண்டும்

எனது வாழ்வில் குழந்தை பருவம் பல பிரச்னைகளை உடையது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என தெரியாத நிலையில் நாங்கள் இருந்தோம். ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும் பரவாயில்லை மனதைரியத்தோடு போராட வேண்டும் என்ற மனப்பான்மை எனக்கு வந்தது" என அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X