38 வருஷமா நான் கண்ணகியாதான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. குஷ்புவின் அதிரடி பேட்டி!

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பிறகு, செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்த நடிகை குஷ்பு, அண்ணாப்பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சென்னைக்கு வந்து 38 வருஷமா நான் கண்ணகியாதான் வாழ்ந்துட்டு இருக்கேன் என்றார்.

அண்ணாப்பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பிரச்னை பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில்,இதுகுறித்து, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் கொடுத்தாச்சு. கல்வியை இலவசமாக கொடுத்து விட்டோம் என்பதால், அந்த பெண்ணிற்கு நடந்த அனைத்தும்,சரியாகிவிடுமா? அந்த மாணவிக்கு ஏற்பட்ட பிரச்னையை அந்த பெண்ணால் சாவுகிற வரைக்கும் மறக்க முடியாது.

kushboo anna university bjp

அதுதான் என் கேள்வி: 2018ம் ஆண்டு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கும்போது, எப்படி அந்த நபரை இத்தனை ஆண்டுகள் விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. இது குறித்துத்தான் தான் நானும், அண்ணாமலை அவர்களும் முதலமைச்சரிடம் கேள்வி கேட்டு வருகிறோம். பல ஆண்டுக்கு முன் வழக்கு போடவில்லை 2018ம் ஆண்டு தான் அது நடந்துள்ளது.

அரசியலாக்காதீர்கள்: ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் இது போன்று பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும் போது, பணம் கொடுப்பது, அந்த கட்சியை சேர்ந்தவர், இந்த கட்சியை சேர்ந்தவர் என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை நடக்கும் போது எந்த கட்சி ரீதியாகவும், அது குறித்து பேசக்கூடாது. இப்போது நாங்கள் பாஜக அலுவலகத்தில் இந்த பிரச்சனை பற்றி பேசுகிறோம் என்றால், இதை நாங்கள் பாஜக சார்பாக பேசவில்லை, பெண் என்கிற முறையில் தான் பேசுகிறோம். தயவு செய்து இந்த விவகாரத்தை அரசியலாக மாற்றாதீர்கள். இந்த மாநிலத்தில் நடக்கலயா, அந்த மாநிலத்தில் நடக்கலயா என்று கேள்வி கேட்டு, பெண்களை அரசியலாக்காதீர்கள் என்றார்.

38 வருஷமா கண்ணகியாக வாழ்கிறேன்: இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், அண்ணாப்பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு கண்ணகியாக போராட்டம் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த குஷ்பு, நான் என்றைக்கும் கண்ணகி தான், இதில், புதுசு ஒன்னும் இல்லை, சென்னைக்கு வந்து 38 வருஷம் ஆச்சு, 38 வருஷமா கண்ணகியாகத் தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். எப்போதும், மனசில் பட்டதை, பேசுவேன், மனதில் பட்டதை செய்வேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை, குஷ்பு சுந்தர் எப்படி இருந்தாங்களோ அதே போல தான் இப்பவும் இருக்கேன் என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X