Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு க்ளைமாக்சில் நடித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. விஜய் குறித்து பேசிய குஷ்பூ!
சென்னை : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், குஷ்பூ, ஜெயசுதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு.
வாரிசு மற்றும் வாரிசுடு என இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் முறையே 11 மற்றும் 14ம் தேதிகளில் ரிலீசாகவுள்ளது.
குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார்.
வாரிசு
படத்தில்
ராஷ்மிகா
மந்தனா
வாங்கிய
சம்பளம்..ஷாக்கான
பேன்ஸ்..இதுதான்
வாரிசு
வளர்ச்சியோ!

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டில் பீஸ்ட் படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூலில் இந்தப் படம் வெற்றியை தந்தது. இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கித்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். பொங்கலையொட்டி இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கில் வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது.

வாரிசு படத்தின் ட்ரெயிலர்
குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வாரிசு படம் உருவாகியுள்ளது. ஆனாலும் விஜய் படங்களுக்கே உரிய காமெடி, ஆக்ஷன் போன்ற அம்சங்களும் படத்தில் அதிகமாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ முன்னதாக தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீடு
இந்நிலையில் வாரிசு படத்தின் டிக்கெட் புக்கிங்கும் துவங்கப்பட்டு, விற்றுத் தீர்ந்துள்ளன. படத்தின் பிரமோஷனும் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் இசை வெளியீடும் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய், ரசிகர்களே தனது போதை என்று பேசியது அனைவரையும் கவர்ந்தது.

க்ளைமாக்ஸ குறித்து பேசிய குஷ்பூ
படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாகியுள்ள நிலையில், பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்து தற்போது நடிகை குஷ்பூ பேசியுள்ளார். வாரிசு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அனைத்து நடிகர்களும் இணைந்து நடிக்க வேண்டியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

ஜுரத்துடன் நடித்த விஜய்
இந்த காம்பினேஷன் காட்சியில் விஜய் கண்டிப்பாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு அந்த நேரத்தில் கடுமையான ஜூரம் இருந்ததாகவும் 103 டிகிரியில் அவருக்கு ஜுரம் காணப்பட்டதாகவும் குஷ்பூ தெரிவித்துள்ளார். இதையடுத்து சூட்டிங்கிற்கு வந்த விஜய், அருகிலிருந்த கேரேஜில் போய் தூங்கிவிட்டு, தன்னுடைய காட்சி படமாக்கப்பட்டபோது வந்து நடித்துக் கொடுத்ததையும் குஷ்பூ தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய்
இந்தக்
காட்சிகளை
முடித்துக்
கொடுத்துவிட்டு
அடுத்தநாள்
தன்னுடைய
சிகிச்சைக்காக
மருத்துவமனையில்
விஜய்
அட்மிட்
ஆனதையும்
குஷ்பூ
தற்போது
வெளிப்படுத்தியுள்ளார்.
நடிப்பை
மிகவும்
நேசிப்பவர்
நடிகர்
விஜய்.
இதுபோல
தன்னுடைய
நடிப்பில்
மிகவும்
டெடிகேஷனாக
செயல்பட்டு
வருவதால்தான்
விஜய்
ரசிகர்களின்
பேவரைட்டாக
தொடர்ந்து
இருக்க
முடிகிறது.