Avantika :படு கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்த குஷ்பூ மகள்.. முகம் சுளித்த இணையவாசிகள்!

சென்னை : நடிகை குஷ்பூ பல ஆண்டுகளை கடந்து சிறந்த நாயகியாக, குணசித்திர நடிகையாக, தயாரிப்பாளராக கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார்.

இவர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இவர்களில் ஒருவர் தயாரிப்பாளராகவும் மற்றொருவர் நடிகையாகவும் திரைத்துறையில் களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actress Kushboos daughter Avantikas photos makes fans unhappy

குஷ்பூ மகளின் கவர்ச்சிப் புகைப்படங்கள் : நடிகை குஷ்பூ 90களில் மிகச்சிறந்த நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர். தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகமாக நடித்தவர். இவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய சம்பவமும் நடந்தது. குண்டான புசுபுசு இட்லிக்கு குஷ்பூ இட்லி என்று ரசிகர்கள் பெயர் வைத்து மகிழ்ந்தனர். ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் குஷ்பூ. பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தியிலும் இவர் முன்னணி நடிகையாகவே இருந்தார். இந்தியில் இவர் சரியாக வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளாத நிலையில், தெலுங்கில் அறிமுகமாகி, அதன்மூலம் தமிழிலும் பிரபுவிற்கு ஜோடியாக தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமானார். தமிழில் முதல் படமே குஷ்பூவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தன்னுடைய துறுதுறு நடிப்பால் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தினார்.

Actress Kushboos daughter Avantikas photos makes fans unhappy

தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு தமிழ்நாட்டு மருமகளான குஷ்பூவிற்கு அனந்திகா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் படித்துவந்த நிலையில், மிகவும் குண்டான உடல்வாகுடன் இருந்த இவர்கள், பல்வேறு கிண்டல்களுக்கு உள்ளாகினர். இதனிடையே, இருவரும் மிகுந்த முயற்சி எடுத்து ஸ்லிம்மாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர். இவர்கள் இருவரில் ஒருவர் தயாரிப்பாளராகவும் ஒருவர் நடிகையாகவும் மாறவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டில் படித்துவரும் அவந்திகா, அங்கிருந்து மிகவும் கவர்ச்சியான உடையுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தொடை மற்றும் கழுத்து, மார்பகங்களில் டாட்டூவுடன், ஹேர் கலரிங் செய்யப்பட்ட நிலையில், இந்தப் புகைப்படங்கள் காணப்படுகின்றன. இந்த மாதிரி கெட்டப்புல போய்தான் காபி குடிக்கனுமாம் அவந்திகாவுக்கு. இந்நிலையில் அவர் அழகாக இருப்பதாகவும் ஆனால் அவருடைய உடை மிகவும் அருவருப்பாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Actress Kushboos daughter Avantikas photos makes fans unhappy

உடை என்பது ஒருவரின் சுதந்திரம்தான் ஆனால் அதை மற்றவர்கள் பார்க்கும்படி பகிர்வது மோசமான செயல் என்றும் இந்தப் புகைப்படங்களை பார்க்கும் யாரேனும் பாலியல் எண்ணம் தூண்டப்பட்டு, ஒரு குழந்தையிடமோ, அப்பாவி இளம் பெண்ணிடமோ முறைதவறி நடந்துக் கொண்டால், அதற்கு காரணம் யார் என்றும் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாகரிகம் என்பது உடலை மறைப்பது தான் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X