ரஜினி, விஜய்தான் டாப்! அதுக்கு அப்பறம்தான் மத்தவங்க! கமலை கழட்டிவிட்ட குஷ்பு! தவெகவில் இணைய ப்ளான்?
சென்னை: தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்கள் என வரிசைப்படுத்தினால் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் பெயர் முதல் இரண்டு இடங்களில் இருக்கும். அதன் பின்னர் விஜய் அஜித் போன்ற நடிகர்களும் அடுத்தடுத்த இடங்களில் இருப்பார்கள். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிகரம் என்றால், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றொரு தூண். தமிழ் சினிமாவின் நுட்பங்கள் குறித்து பேசுபவர்களிடம் கேட்டால், ரஜினிகாந்த்தான் தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ எனக் கூறுவார்கள்.
அதேபோல் கமல்ஹாசன் குறித்து கேட்டால், வெளிநாடுகளில் இருந்த தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவுக்கு அறிமுகப் படுத்திய மாபெரும் சினிமா கலைஞன் எனக் கூறுவார்கள். குறிப்பாக இன்றைக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஓ.டி.டி., தளங்கள் குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகம் செய்து வைத்தவர். தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் கமல் ஹாசன், தன்னை நடிகராக மட்டும் இல்லாமல், நடனக் கலைஞராக, கதை ஆசிரியராக, இயக்குநராக, ஒப்பனைக் கலைஞராக என சினிமாவின் அத்தனை துறைகளையும் கற்று கொண்ட ஒரே இந்தியக் கலைஞனாக இருக்கின்றார்.

மேலும், கமல் ஹாசன் வெறுமனே கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிக்காமல், உலகத்தரமான சினிமாக்களில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டு தனது படங்களில் மிகவும் அசாத்தியமான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார். இன்றைக்கும் கமல்ஹாசனின் நடிப்பை ஓஅவர் டேக் செய்யும் அளவிலான நடிப்பு தமிழ் சினிமா சூழலில் யாரும் இல்லை எனக் கூறலாம். ஒருகாலத்தில் சிவாஜி, நாகேஷ் போன்றோர் இருந்தனர்.
குஷ்பு: இப்படியான நிலையில், நடிகை குஷ்பு மற்றும் நடிகையும் வசனகர்த்தாவுமான சுஹாசினி கலந்துரையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதில் நடிகை குஷ்பு பேசுகையில், " நடிகர் விஜய்யைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்படும் விசயம் என்றால், அவர் தனது முதல் படத்தில் இடம் பெற்றுள்ள தொட்டபெட்டா ரோட்டுமேல முட்ட புரோட்டா பாடலில் இருந்த அழகைவிடவும் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலில் கூடுதல் அழகோடு இருக்கின்றார்.
ரஜினிக்கு அடுத்து விஜய்தான்: தமிழ்நாட்டின் மிகவும் அன்பிற்குரிய நபராக விஜய் உள்ளார். அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இளம் பெண்கள் தொடங்கி, குடும்பப் பெண்கள் வரை அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். எனது மகளுக்கு 20 வயதுதான் ஆகின்றது. விஜய்யைப் பார்த்தால் எனது மகள் குஷியாகிவிடுவார். நடுத்தரக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் தான் அல்டிமேட். இவர்களுக்குப் அப்பறம்தான் மற்றவர்கள்" என குஷ்பு பேசியிருந்தார்.

தவெகவில் இணையும் குஷ்பு? குஷ்புவின் இந்த பேச்சு திரைத்துறையில் பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், கமல், அஜித் ரசிகர்கள் கோபமடையச் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் மாபெரும் வசூல் மன்னன்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் குஷ்பு இவ்வாறு பேசுவதற்கு முக்கிய காரணமே விஜய்யின் தவெகவில் இணைவதற்காகத்தான் எனவும் கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக விஜய் வளர்ந்திருந்தாலும் கமல்ஹாசனை கணக்கில் சேர்க்காத குஷ்புவின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்துதான்.



Click it and Unblock the Notifications











