ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம்: பூமராங் போல திரும்பி வந்து தாக்கும்.. குஷ்பு சொன்னது என்ன?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்துத் செய்ய முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். கோர்ட்டில் விவாகரத்துத் வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். ஜெயம் ரவியின் இந்த முடிவு முழுக்க முழுக்க தன் கவனத்திற்கு வராமல் எடுக்கப்பட்ட முடிவு என ஆர்த்தி கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த ஜெயம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், நான் எடுத்த விவாகரத்துத் முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். இதுகுறித்து அவரின் அப்பா என் பெற்றோரிடம் பேசினார். என் மூத்த மகனிடம் இதுகுறித்து பேசினேன். அவன், மற்ற குழந்தைகளை போல, இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றான். இரண்டு மகன்களும் என்னுடன் தான் இருக்கிறார்கள். மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

நடிகர் ஜெயம் ரவி: பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலஜிஸ்ட், மனஅழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். அவரோடு ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதற்காகத்தான் இப்படி பேசுகிறார்களா என தெரியவில்லை, இதுபற்றி அதிகம் பேச வேண்டாம் என நினைக்கிறேன். உண்மை ஒருநாள் வெளிவரும் என்று ஜெயம் ரவி பேசி இருந்தார்.
குஷ்பு சொன்ன அட்வைஸ்: இந்நிலையில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட குஷ்பு இத்தனை நாட்களாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த நிலையில், தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு உண்மையான மனிதன் எப்போதும் உயர்ந்து நிற்கிறான். அவன் தனது தேவை, ஆசை, விருப்பம் மற்றும் சுதந்திரங்கள் என அனைத்தும் குடும்பத்தின் முன் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது. திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். தவறுகள் நடக்கும். அதற்காக அத்தனை ஆண்டுகள் கட்டி பாதுகாத்து வந்த வாழ்க்கையை கைவிடுவது ஒருபோதும் சரியானதாக இருக்காது.
பூமராங் போல திரும்ப வரும்: உறவில் சில நேரங்களில் காதல் குறைத்து போகலாம். ஆனால், வாழ்க்கை அழகானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும், சுயநலத்தோடு நாம் எடுக்கும் முடிவு பெரும்பாலும் பூமராங் போல திரும்பவும் நம்மையே கடுமையாக தாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. குழந்தையின் தாயை மதிக்க வேண்டும் என்பது அடிப்படை மரியாதை, இது இல்லாமல், ஒரு மனிதன் மற்றவர்களின் மரியாதையை பெறவோ அல்லது வாழ்க்கையில் வெற்றிபெறவோ முடியாது.
ஒரு தாயை, உன்னை நேசிக்கும் பெண்ணை அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. அன்பு அசையக்கூடும், ஆனால் மரியாதை என்பது இதயங்களையும் ஆன்மாக்களையும் ஒன்றாக இணைக்கும். குடும்பத்தை போற்றுவதும்தான் உண்மையான பலம் என அந்த பதிவில் குஷ்பு மறைமுகமாக ஜெயம் ரவிக்கு அறிவுரை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











