Don't Miss!
- News
அதிக கல்லூரிகள் கொண்ட மாநிலங்கள்.. டாப் 5 இடங்களில் தமிழகம் இல்லை.. யாருக்கு முதலிடம் தெரியுமா
- Sports
"பயந்ததை போலவே நடக்குதே".. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ எடுக்த அட்டகாச முடிவு!
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கீழ்த்தனமானபுத்தி..மாறவே மாட்டீங்களாடா?ட்விட்டரில் வம்பிழுத்தவருக்கு பொளேர்னு பதிலடி கொடுத்த குஷ்பு!
சென்னை : ட்விட்டரில் கிண்டலடித்தவருக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார் நடிகை குஷ்பு.
தமிழ் சினிமாவில் நடிகை குஷ்புவுக்கு என்று ரசிகர்கள் மனதில் தனிஇடம் உண்டு. 80களில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய குஷ்பு தற்போது வரை டாப் நடிகையாகவே இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிப்படங்களில் இவர் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஸ்டார் நடிகர்களுடன் இவர் நடித்து விட்டார்.
எந்த
பிரார்த்தனையும்
கைகொடுக்கல..திடீர்
மரணம்..கதறி
துடிக்கும்
நடிகை
குஷ்பு!

துணிச்சலான குஷ்பு
சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் தனது தடத்தை பதித்து அதில் வெற்றியும் கண்ட குஷ்பு பாஜகவில் இணைந்து அரசியலிலும் கலக்கி வருகிறார். சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, பல சமூக பிரச்சனைகளுக்கும் அவ்வப்போது துணிச்சலுடன் குரல் கொடுத்து வருகிறார்.

அண்ணன் உயிருக்கு போராடுகிறார்
நடிகை குஷ்புவின் மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார் என்றும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் என்னுடைய சகோதரர் அபுபக்கர் விரைவில் குணமடைய தயவு செய்து எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

உயிரிழந்தார்
இதையடுத்து சனிக்கிழமை குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டதாக, குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்ணீருடன் பகிர்ந்து இருந்தார். இதில், எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு அன்புக்குரியவர்களை, விடைபெறும் நேரம் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிவடைந்து விட்டது என்று பகிர்ந்து இருந்தார்.

செருப்பு சைஸ் 41
குஷ்புவின் இந்த பதிவினைப்பார்த்த ஒரு நெட்டிசன், அக்காவுக்கு சின்ன தம்பி ஞாபகம் வந்திருச்சு என கிண்டலாக பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினை பார்த்து டென்ஷன் ஆன குஷ்பு, எனது செருப்பு சைஸ் 41, தைரியம் இருந்தால் நேரில் வா. இதுதான் உங்க கீழ்த்தனமான புத்தி மாறவே மாட்டீங்களாடா..நீ எல்லாம் கலைஞர் ஃபாலோவர்ஸ்னு சொல்லிக்க வெட்கப்படனும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். குஷ்புவின் கோபத்திற்கு ஆளான அந்த நபர் டெலிட் செய்து விட்டார். குஷ்பூ உச்சகட்ட கோபம் அடைந்து கோபத்தை வெளிப்படுத்தி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.