யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு..எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியல புலம்பும் ரசிகர்கள்!
சென்னை : நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் என்ன மேடம் இதெல்லாம் என புலம்பி வருகின்றனர்.
கன்னம் ரெண்டும் நல்ல உப்பி, பார்ப்பதற்கே ஜீராவில் ஊறிய குலாப் ஜாமுன் மாதிரி சும்மா கும்முனு இருப்பார் குஷ்பு
அப்படி கும்முனு இருந்த குஷ்பு தற்போது 20 கிலோ வரை எடை குறைந்து எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.

குஷ்பு
தமிழில் வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி 1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு. ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கிய நடிகை குஷ்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

விதவிதமான ஜாக்கெட்
வெள்ளித்திரையில் இவர் ஜோடி சேர்ந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து நடிகர்களுடனும் நடித்த ஒரே நடிகை என்று பெயர் எடுத்த குஷ்பு. ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜாக்பாட் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சி ஜாக்பாட் நிகழ்ச்சியா? இல்லை ஜாக்கெட் நிகழ்ச்சியா என தெரியாத அளவுக்கு குஷ்பு போட்டு வரும் வித விதமான டிசைன் ஜாக்கெட்டு பெண்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சியை விட அதிகம் பேசப்பட்டது.

இரண்டு மகள்கள்
சினிமா, அரசியல், சின்னத்திரை என அனைத்திலும் சகலகலா வல்லியாக சுற்றி வந்த குஷ்பு, சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் குஷ்பு தொடர்ந்து நடித்து வருகிறார். சுந்தர்சி மற்றும் குஷ்பு தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அடையாளமே தெரியல
குஷ்பு சில தினங்களுக்கு முன்பு கடுமையான உடற்பயிற்சி செய்து இன்றைய இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் 20 கிலோ குறைந்துள்ளார். ட்விட்டரில் அவர் ஷேர் செய்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி பட குஷ்புவை போல் இருப்பதாக கூறி வந்தாலும், ஒரு சிலர், என்ன மேடம் அதெல்லாம், உங்களுடையே அழகே கொழு கொழு கன்னம் தான் அது இல்லாம, எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியல... இப்படி ஆய்ட்டீங்களே என புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











