kushboo sundar: குஷ்பூ என்னங்க குஷ்பூ.. அவங்க பொண்ணுங்க அழகைப்பாருங்க!

சென்னை: நடிகை குஷ்பூ மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில், ரசிகர்கள் பலர் கமெண்ட் மற்றும் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.

80களில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய குஷ்பூ தற்போது வரை முன்னணி நடிகையாகவே இருக்கிறார்.

Actress kushboo sundar shared cute daughters photos on instagram

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிப்படங்களில் இவர் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஸ்டார் நடிகர்களுடன் இவர் நடித்து விட்டார்.

நடிகை குஷ்பூ சுந்தர்: நடிப்பின் ராட்சசியான குஷ்பூ சுந்தர்.சி இயக்கத்தில் உருவான முறைமாமன் படத்தில் கதாநாயகியாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. குஷ்புவின் அழகாலும், சுட்டித்தனமான பேச்சால் தனது மனதை பறிகொடுத்த சுந்தர் சி தனது காதலை வெளிப்படுத்த இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இருவரும் அதே அன்புடன் இருக்கிறார்கள்

Actress kushboo sundar shared cute daughters photos on instagram

அவந்திகா, அனந்திதா: சுந்தர் சி மற்றும் குஷ்பு தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். நடிகை குஷ்பு திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து நடித்து வருகிறார். குஷ்பூ கடைசியாக விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் தனது தடத்தை பதித்து அதில் வெற்றியும் கண்ட குஷ்பு பாஜகவில் இணைந்து அரசியலிலும் கலக்கி வருகிறார்.

Actress kushboo sundar shared cute daughters photos on instagram

குஷ்பூ என்னங்க குஷ்பூ: சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்து இருக்கிறார். அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்யும் குஷ்பூ தற்போது, மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து அதற்கு கேப்ஷனாக, நான் எப்போதுமே எனது மகள்களை விரும்புகிறேன், கடவுள் எனக்கு கொடுத்த நல்ல நண்பர்கள் எனது இரண்டு மகள்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வரும் நிலையில், சில நெட்டிசன்ஸ் குஷ்பூ என்னங்க குஷ்பூ.. அவங்க பொண்ணுங்க அழகைப்பாருங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X