உடம்பை வில்லாக வளைத்து… அசால்டாக யோகா .. குஷ்புவா இது.. வாய்பிளந்த ரசிகர்கள் !!
சென்னை: தமிழ் நடிகைகள் பலரும் லாக்டவுனின் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை தொடர்ந்து நடிகை குஷ்புவும் இப்போது களத்தில் இறங்கியுள்ளார்.
Recommended Video
பொதுவாக தன்னுடைய அழகான புகைப்படங்களையும், குடும்பத்தாருடன் இருக்கும் க்யூட்டான போட்டோக்களை மட்டும் பதிவிட்டு வந்த குஷ்பூ இப்பொழுது யோகா செய்து அசத்திய புகைப்படங்களை பதிந்துள்ளார்.
நடிப்பிலும் நடனத்திலும் குஷ்பூ மிகச் சிறந்தவர் என பலமுறை பல படங்களில் நிரூபித்திருக்கிறார், ஆனால் முதல் முறை யோகா செய்து அசத்திய குஷ்புவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

முதல் ஆளாக
தமிழ் நடிகைகளில் சினிமாவை தவிர சமூக அக்கறையிலும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது ஒரு சில நடிகைகள் மட்டுமே அந்தவகையில் நடிகை குஷ்பூ இதுவரை எந்த ஒரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு முதல் ஆளாக குரல் கொடுத்தும், மக்களுக்கு தோல் கொடுத்தும் தொடர்ந்து தனது சமூக பணியை ஆற்றி வருகிறார்.

ரசிகர்களின் பலத்தோடு
இவ்வாறு ஒரு பக்கம் சமூக பிரச்சனைகளுக்காக ஓடிக்கொண்டிருந்தாலும் மற்றொருபுறம் படங்களை தயாரிப்பதிலும் படங்களில் நடிப்பதிலும் பிஸியாக இருந்து கொண்டு வருகிறார். 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ இன்று வரை அதே ரசிகர்களின் பலத்தோடு பல படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

புகழ்பெற்ற நடிகை
அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார், இவருடன் இணைந்து மற்றொரு புகழ்பெற்ற நடிகையான மீனாவும் இதில் நடித்து வருவது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கருத்துக்களையும் புகைப்படங்கள்
இவ்வாறு பலரும் எதிர்பார்க்கும் திரைப்படத்தில் நடித்து வரும் குஷ்பு இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருடைய கருத்துக்களையும் புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பல யோகாசனங்களை
இதுவரை தன்னுடைய அழகான புகைப்படங்களையும், குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்கும் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை மட்டுமே பதிவிட்டு வந்த குஷ்பு தற்பொழுது உடற்பயிற்சி செய்து அசத்தியும் வருகிறார். சாதாரண நபர்களே தங்களுடைய உடம்பை வில்லாக வளைத்து ஒரு சில யோகாசனங்களை செய்ய கஷ்டப்படும் வேளையில் குஷ்பு தனது உடலை அசால்டாக வில்லாக வளைத்து பல யோகாசனங்களை மிக எளிதாக செய்து அந்த புகைப்படங்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.

நீங்க வேற லெவல்
இந்த புகைப்படத்தை பார்த்த பல்வேறு திரைப் பிரபலங்களும் ஆச்சர்யமாக "வாவ்" என சொல்லி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த அதீத யோகா பயிற்சியை செய்து காட்டிய குஷ்புவை பாராட்டுவதோடு நீங்க வேற லெவல் என புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











