Kushboo: நாலுபேருக்கு நடுவே உடை மாற்றினேன்! எல்லாம் நம்பிக்கைதான் - ஓபனாக பேசிய குஷ்பு!

சென்னை: தமிழ் சினிமாவில் 90 மற்றும் 2000களில் முன்னணி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை குஷ்பு. இவரது நடிப்பில் பல படங்கள் சூப்ப்ர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. தமிழ் நாட்டில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது நடிகை குஷ்புவுக்குத்தான் முதன் முதலில் கோவில் கட்டப்பட்டது. அதேபோல் அவரது தோற்றத்தை சிலாகிக்கும் வகையில் குஷ்பு இட்லி என்றெல்லாம் இட்லிக்கு பெயர் வைத்து இன்றும் வியாபாரம் நடத்தும் கடைகள் இருக்கத்தான் செய்கின்றது. இவர் தற்போது சினிமாவில் இருந்து முழுமையாக விலகவில்லை என்றாலும், அதிகமாக அரசியல் களத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்.

தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள குஷ்பு, முன்னணி கதாநாயகியாக இருந்த காலகட்டத்தில் நாட்டாமை, அண்ணாமலை, சின்னதம்பி, மகளிர்க்காக உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். பெரியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மணியம்மையாக நடித்திருந்தார். இவர் இயக்குநர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார்.

Kushboo Kala Master

இவரது சமீபத்திய பேட்டி ஒன்று இணையத்தில் வேகமாக உலா வருகின்றது. அதில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை தொடர்பாக மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக படப்பிடிப்புத் தளத்தில் அவர் எதிர்கொண்ட பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பாக விரிவாக பேசியுள்ளார். மேலும் தான் படங்களில் நடித்த காலத்தில் படப்பிடிப்புத் தளத்தில் உடைகள் மாற்ற சந்தித்த சவால்கள் குறித்து பேசியுள்ளார்.

நாலுபேருக்கு நடுவே உடை மாற்றுவேன்: அதில் " அப்போது எல்லாம் இப்போது மாதிரி கேரவன் எல்லாம் கிடையாது. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு தயாராக உடைகள் மாற்ற வேண்டும் என்றால் நம்முடன் இரண்டு லைட் மேன்கள் மற்றும் இரண்டு ஒப்பனைக் கலைஞர்களை அனுப்புவார்கள். அவர்கள் நான்கு பேரும் கையில் ஒரு பெரிய துணி வைத்து என்னை மறைத்துக் கொள்வார்கள். நான் உள்ளே ஆடைகளை மாற்றுவேன். என்னைச் சுற்றி நாலு பேர் இருந்தாலும் எனக்கு பயம் இல்லை. காரணம் அவர்கள் ஏற்படுத்திய நம்பிக்கை. அப்போது செல்போன் கிடையாது என்பதால் பயம் இல்லை. ஆனால் இப்போது பயம் இருக்கின்றது.

Kushboo Kala Master

அம்பாசிட்டர் காரில் வைத்து: இதுமட்டும் இல்லாமல், நான் அம்பாசிட்டர் காருக்குள் அமர்ந்து எல்லாம் உடை மாற்றி இருக்கின்றேன். அம்பாசிட்டர் கார் முற்றிலும் துணி போட்டு மூடப்பட்டு இருக்கும். காருக்கு வெளியே டிரைவர் நின்றுகொண்டு இருப்பார். அவர் அந்த வழியாக வருபவர்களை அங்கு வரவேண்டாம் என பார்த்துக் கொள்வார். இந்த நம்பிக்கைதான் நிம்மதியாக பணியாற்ற உதவியது. இன்றைக்கு கேரவன்கள் வந்திருந்தாலும், முந்தைய காலத்தில் இதுபோன்ற சூழலை சந்தித்ததால்தான் இன்றைக்கு கேரவன் வந்துள்ளது" என பேசியுள்ளார்.

Kushboo Kala Master

தமிழ் கற்றுக் கொள்ள காரணம்: மேலும், பல மொழிகளில் பேசினாலும் நடித்தாலும் தமிழ் நாட்டில் செட்டில் ஆகிவிட்டதால் தமிழ் பேச மட்டும் அல்ல படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரபு சார் கூறினார். மேலு உடன் பணியாற்றுபவர்களுடன் பேசவும் அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும் என புரிந்தது. அதன் பின்னர்தான் தமிழ் படிக்க கற்றுக்கொண்டேன். அதற்காக தினமும் தமிழ் செய்தித்தாள்களைப் படிப்பேன் எனக் கூறியுள்ளார்.

Kushboo Kala Master

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X