மே 11 முதல் ஆன் ஏர்.. 5ம் தேதி முதல் சீரியல் ஷூட்டிங் தொடங்குகிறதா.. நடிகை குஷ்பு விளக்கம்!

சென்னை: மே 5ம் தேதி சீரியல் ஷூட்டிங் தொடங்க வேண்டும் என்றும், மே 11ம் தேதி சீரியல்களின் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பு ஆக வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் வலியுறுத்தி வருவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

மே 11 முதல் சீரியல் ஷூட்டிங் தொடங்குகிறதா.. நடிகை குஷ்பு விளக்கம்!

நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Actress Kushboo talks about Serial Shooting possibilities!

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ள நிலையில், மே 3ம் தேதிக்குள் இந்தியா முழுவதும் இயல்பு நிலை முழுமையாக திரும்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில், மே 5ம் தேதி சீரியல் ஷூட்டிங்குகள் தொடங்கப்பட்டு, மே 11ம் தேதி முதல் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாக வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து இயக்குநர் செல்வமணி உடன் கலந்தாலோசித்த நடிகை குஷ்பு, சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் பேசியுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது தான் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.

ரேண்டமாக பல மாவட்டங்களில் சோதனை செய்ய வேண்டும். வரும் ஏப்ரல் 25ம் தேதிக்கு மேல் தான் நிலைமை எப்படி இருக்கிறது, சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி அளிக்கலாமா என்ற முடிவை அப்போது தான் யோசிக்க முடியும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அப்படியே ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்தாலும், முன்பு மாதிரி, கூட்டமாக ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்க முடியாது என்றும், குறைவான ஆட்களுடன், இன் டோர் ஷூட் நடத்தவே அனுமதி கொடுக்கப்படும். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், அப்படி விதிகளை மீறு வோருக்கு அபராதம் விதிக்க படும் என்றும் கூறியுள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

அதேபோல, சீரியல் ஷூட்டிங் எடுக்கும் இயக்குநர்கள் ஒரு நாளைக்கு ஒன்றரை எபிசோடுகள் எடுக்கவும், எந்தவொரு நேரத்தையும், எதற்காகவும் வீணடிக்காமல், பணத்தையும் நேரத்தையும் கவனமாக செலவு செய்து ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X