Chinnathambi :சின்னத்தம்பி 32.. என் இதயம் பிரபுவுக்காக எப்போதும் துடிக்கும்.. பழசை மறக்காத குஷ்பூ !
சென்னை : சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி இன்றோது 32வருடம் ஆனதை அடுத்து நடிகை குஷ்பு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒரு சில படங்கள்தான் ஒட்டுமொத்த திரையுலகையுமே பொறாமைப்படும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை அடையும். அப்படி வெற்றிப்பெற்ற படம் தான் சின்னத்தம்பி.
இந்த படத்தில் குஷ்பு,பிரபு, மனோரம்மா,ராதா ரவி, செந்தில்,கவுண்டமணி பல நடிகர்கள் நடித்திருப்பார்கள் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருந்தார்.

சின்னத்தம்பி பிரபு: சின்னத்தம்பி என்றதும் நமக்கு முதலில் நம் நினைவுக்கு வருவது கன்னக்குழி அழகுடன், குழந்தைத்தனமாக பேசி சிரிக்கும் பிரபுதான். கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டினால் அது கல்யாணம் என தெரியாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபு அழகான நடிப்பை வெளிப்படுதி இருந்தார். சிவாஜிக்குக்கூட இப்படியொரு கதாபாத்திரம் நமக்கு அமையவில்லை என்ற வருத்தம் இருந்து இருக்கும்.
கோவில் கட்ட காரணமான படம்: சின்னத்தம்பி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் குஷ்பு. அவருக்கு கோவில் கட்ட காரணமாக இருந்ததும் இந்த படம் தான். அண்ணன்களின் பசத்தில பொத்தி பொத்தி வளரும் கேரக்டரில் அழகாக பொருந்தி நடித்திருப்பார். இந்த காலகட்டத்தில் தான் பிரபு , குஷ்பு காதல் விவகாரம் கிசுகிசுக்கப்பட்டதால், இவர்களின் கெமிஸ்ட்ரியும் பக்காவாக இருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும், நீ எங்கே என் அன்பே பாடலில் தியேட்டரே கண்ணீரில் மூழ்கடித்தார்.

லாஜிக் மீறல்கள்: தங்கையை ஆண்கள் பார்த்தாலே மொட்டை, தங்கை மீது அளவு கடந்த பாசம், முரட்டுத்தனமாக அண்ணன்கள், தாலியே தெரியாத ஹீரோ, தாலியை மறைக்கும் ஹீரோயின் என படம் முழுக்க லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ஆடியன்ஸ் படத்தை ரசித்து பார்க்கும் வகையில் பி.வாசு படத்தை மேஜிக்காக சொல்லி கைத்தட்டலை அள்ளினார். சின்னத்தம்பி வெற்றிக்கும் இளையராஜாவுக்கும் பெரும்பங்கு கொடுத்தே ஆகவேண்டும். போவோமா ஊர்கோலம், தூளியிலே ஆடவந்த, அரைச்ச சந்தனம், குயில புடிச்சு என பல பாடல்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் ஆனதை அடுத்து நடிகை குஷ்பு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சின்னத்தம்பி, தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். என் இதயம் எப்போதும் வாசு மற்றும் பிரபு ஆகியோருக்காக துடிக்கும். இளையராஜா கிளர்ந்தெழுக இசையை மறக்கவே முடியாது. இந்த படத்தை தயாரித்த மறைந்த தயாரிப்பாளருக்கு பாலு அவர்களுக்கு எனது நன்றி. சின்னத்தம்பி படத்தின் நந்தினியின் கேரக்டர் அனைவரின் இதயங்களிலும் என்றென்றும் பதிந்து உள்ளது. அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி என்றார்.


Click it and Unblock the Notifications











