எனது தூணுக்கு பிறந்தநாள்.. என்னை நீங்கதான் முழுமை அடைய செஞ்சீங்க.. குஷ்புவின் ஸ்பெஷல் வாழ்த்து!

By staff

சென்னை: தமிழ் சினிமாவில் தனது கமர்சியல் படங்களால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சுந்தர்.சி இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சுந்தர்.சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷ்பெஷலான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது முதல் திரைப்படமான முறைமாமன் படத்தில் ஜெயராம் மற்றும் குஷ்புவை வைத்து இயக்கினார் சுந்தர்.சி.

Actress kushboo wishes mr.commercial a happy birthday

அந்த படத்தில் இடம்பெற்றிருந்த கவுண்டமணி, செந்தில் காமெடி இன்று வரை அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இதில் ஹீரோயினாக குஷ்பு நடித்தார்.

பின்னாளில் நடிகை குஷ்புவையே திருமணம் செய்து கொண்டார் சுந்தர்.சி தனது முதல் திரைப்படமே வெற்றி படமாக கொடுத்தார் சுந்தர்.சி

இதனை அடுத்து மீண்டும் கமர்சியல் பக்கம் திரும்பினார். இவரது படங்களில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் அரண்மனை. கமர்சியல் படங்களாக எடுத்து வந்த இவர் திடீரென்று பேய் படம் எடுக்க போவதாக கூறினார்.

ரஜினியை வைத்து அருணாச்சலம் என்ற படத்தை இயக்கினார் சுந்தர். சி. ரஜினி படங்கள் வரிசையில் இப்படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.
இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன் பின் பல கமர்சியல் படங்கள் இயக்கினார் சுந்தர்.சி

தொடர்ந்து கமர்சியல் படங்களாக எடுத்து வந்த இவர், கமல்ஹாசன் மற்றும் மாதவன் நடித்த அன்பே சிவம் படத்தையும் இயக்கினார்.
இப்படம் அப்போது சுமாராகவே சென்றது. தற்போது இப்படத்தை போல இன்னொரு படம் எடுக்கும்படி சுந்தர்.சி யிடம் பலர் கூறுகின்றனர்.

இதனை அடுத்து மீண்டும் கமர்சியல் பக்கம் திரும்பினார். இவரது படங்களில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் அரண்மனை. கமர்சியல் படங்களாக எடுத்து வந்த இவர் திடீரென்று பேய் படம் எடுத்தபதாக பலரும் கூறினார்.

ஆனால் பேய் படத்தையும் கமர்சியலாக எடுத்தார் சுந்தர். சி. வருடத்திற்கு ஒரு படமாவது சுந்தர்.சி யிடம் இருந்து வந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என்பதே உண்மை. இவர் நடிப்பது மட்டுமல்லாது திரைப்படங்கள் மற்றும் பல சீரியல்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுந்தர்.சி க்கு அவரது மனைவி குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், எனது தூணுக்கு பிறந்தநாள், நீங்க தான் என்னை முழுமை அடைய செய்தீர்கள், நீங்க தான் என் ஹீரோ என ஸ்பெஷலா பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X