Kushbu :கேன்ஸ் படவிழாவில் இந்திய பிரதிநிதியாக பங்கேற்ற நடிகை குஷ்பூ.. சூப்பர்ல!

சென்னை :பிரான்சில் உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் சர்வதேச அளவில் சிறப்பான திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்த விழாவில் இந்திய பிரதிநிதியாக நடிகை குஷ்பூ பங்கேற்றுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற குஷ்பூ : பிரான்சில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா துவங்கி நடைபெற்று வருகிறது. வரும 27ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த விழாவில் உலகின் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல் முருகன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றுள்ளனர். நடிகை குஷ்பூ, நடிகை ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, மிருணாள் தாக்கூர், சாரா அலிகான் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Actress Kushbu participates 76th canes film festival

இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான கென்னடி, ராகுல்ராய் நடிப்பில் வெளியான ஆக்ரா, மணிப்பூரில் கடந்த 1990ம் ஆண்டில் வெளியான இஷானோ ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்நிலையில் இந்த இந்திய பிரதிநிதியாக பங்கேற்றதற்கு தன்னை செலக்ட் செய்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இந்தி வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் புடவையில் அவர் பங்கேற்றார். எப்போதும் தன்னுடைய பாரம்பரிய உடையான புடவையை தான் கூடவே கொண்டு செல்வதாக அவர் கூறியுள்ளார் இதனிடையே விழாவில் பங்கேற்ற முக்கிய பிரதிநிதிகளுடன் தான் கலந்துரையாடியதாகவும், பல்வேறு விஷயங்கள் குறித்த தங்களது உரையாடல் மூலம் பல விஷயங்களை தான் அறிந்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகை குஷ்பூ அடுத்தடுத்த சிறப்பான தளங்களில் பணியாற்றி வருகிறார். அவரது வளர்ச்சி மிகவும் பிரமிப்பை ஏற்படுததி வருகிறது. தயாரிப்பாளர், நடிகை, சீரியல் நடிகை, அரசியல் என பல்வேறு தளங்களில் அவரை காண முடிகிறது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பனராகவும் அதிரடி கிளப்பிவரும் குஷ்பூ, தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவிலும் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது இஸ்டாகிராம் பக்கத்திலும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் எல் முருகனும் வேட்டி சட்டையில் பங்கேற்று கெத்து காட்டினார். சர்வதேச அளவில் ஏராளமான மொழிகளை சேர்ந்த திரைப்படங்கள் இந்த விழாவில் ஒளிபரப்பப்பட உள்ளது. கடந்த ஆண்டில் இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் சிறப்பான பல நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடிகை குஷ்பூ பங்கேற்றுள்ளார்.

More from Filmibeat

Read more about: kushbu குஷ்பூ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X