அப்பாவின் செல்லங்கள்.. அப்ப அம்மா?.. குஷ்பூ வெளியிட்ட பதிவு!

சென்னை : நடிகை, தயாரிப்பாளர், சின்னத்திரை ஆங்கர், சின்னத்திரை நடிகை, அரசியல் என பன்முகத் திறமைகளுடன் வலம்வந்து கொண்டிருக்கிறார் நடிகை குஷ்பூ.

இவருக்கு அழகான கணவர், இரண்டு பெண்கள் என சிறப்பான குடும்பமும் உள்ள நிலையில், அதையும் சிறப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தொடர்ந்து பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ 90களின் சிறப்பான நாயகியாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். இவரது பல வெற்றிப் படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கு உரியைவையாக அமைந்துள்ளன. மிகவும் அழகான, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாபக இருந்த குஷ்பூவிற்கு கோயில் கட்டிய சம்பவங்களும் நடந்தன. குஷ்பூ பெயரால் இட்லியும் தமிழகத்தில் பேமசாக உள்ளன.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

கமல், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து சிறப்பான பல படங்களை கொடுத்த குஷ்பூ, ஒரு கட்டத்தில் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு தமிழகத்தின் மருமகளாக செட்டில் ஆனார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இருவரும் இணைந்து அவ்னி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.

சின்னத்திரையில் குஷ்பூ

சின்னத்திரையில் குஷ்பூ

இதனிடையே சின்னத்திரையிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் குஷ்பூ, இவரது நடிப்பில் சின்னத்திரையில் பல சீரியல்கள் வெற்றிகரமாக அமைந்தன. சமீபத்தில் மீரா என்ற தொடரிலும் இவர் நடித்திருந்தார். இதனிடையே சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் குஷ்பூ பங்கேற்று அதை பிரபலமாக்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

இதனிடையே சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் குஷ்பூ. குண்டாக கொழுகொழுவென இருக்கும் தனது அடையாளத்தை மாற்றி தற்போது ஸ்லிம்மாகியுள்ளார். தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் இவரது அடுத்தடுத்த பதிவுகளை காண முடிகிறது. இதன்மூலம் ஏராளமான பாலோயர்களையும் பெற்று வருகிறார்.

எப்போதுமே அப்பாவின் செல்லங்கள்

எப்போதுமே அப்பாவின் செல்லங்கள்

தன்னுடைய குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்து இவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய பெண்கள் மற்றும் கணவர் சுந்தர் சியின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ள குஷ்பூ, எப்போதுமே அப்பாவின் செல்லங்கள் என்று தனது மகள்களை குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அம்மா செல்லங்கள் இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X