பொண்டாட்டிய ரசிச்சு போட்டோ எடுத்திருக்காருய்யா.. சுந்தர்சி எடுத்ததை கெத்தாய் ஷேர் செய்த குஷ்பு!

சென்னை: கணவர் சுந்தர் சி தன்னை ரசித்து ரசித்து எடுத்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் நடிகை குஷ்பு.

Recommended Video

Annathe Release Date Announced | Nasser Kabadadhari Dubbing, Master Post Production Starts

நடிகை குஷ்பு அரசியல், சினிமா, டிவி, சமூக வலைதளங்கள் என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது கணவர் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க தவறுவதில்லை.

குடும்பத்துடன் பண்டிகைகளை கொண்டாடுவது, சுற்றுலா செல்வது என ஒரு பக்கம் அதையும் பக்ககாவாக மேனேஜ் செய்து வருகிறார்.

 தீராத காதல்

தீராத காதல்

சுந்தர் சி தன்னிடம் காதலை சொன்னதன் சில்வர் ஜூப்ளி, திருமண நாள், பிறந்த நாள் என அனைத்தையும் தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வருகிறார். அவ்வப்போது சுந்தர் சி மீதான காதலையும் வெளிப்படுத்தி வருகிறார் குஷ்பு.

 அசத்தல் போஸ்

அசத்தல் போஸ்

குஷ்பு அவரது கணவர் குறித்து பதிவிடும் டிவிட்டுகளே சுந்தர் சி மீது அவர் கொண்டுள்ள காதலை பளிச்சிட்டு காட்டும். இந்நிலையில் நடிகை குஷ்பு, சேலைக்கு விளம்பரம் செய்வது போல அழகுப் புடவையில் அசத்தலாய் போஸ் கொடுத்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

 கர்ட்டஸி சுந்தர்சி

கர்ட்டஸி சுந்தர்சி

மேலும் அந்த போட்டோவுக்கு, எந்த விசேஷமும் இல்லை, நன்றாக உணர விரும்பினேன். ஆனால் உங்களின் சிறந்த பாதி அந்த போட்டோவை எடுக்கும் போது அது சிறப்பானதாகிவிடும். பிக்சர்ஸ் கர்ட்டஸி சுந்தர்சி என குறிப்பிட்டுள்ளார்.

 வளைத்து வளைத்து..

வளைத்து வளைத்து..

இதன் மூலம் தனது போட்டோக்களை எடுத்தது சுந்தர் சி என்றும் அவர் போட்டோ எடுத்ததால் எந்த விசேஷமும் இல்லாதபோதும் அது ஸ்பெஷலாகி விட்டது என்று கணவரின் புகழை பாடியிருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது.. சுந்தர்சியும் அவரை வளைத்து வளைத்து அருமையாக போட்டோ எடுத்துள்ளார்.

 அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

ஒரே சேலையில் இருந்த போதும் விதவிதமான ஹேர் ஸ்டைலில் தனது மனைவியை ரசித்து ரசித்து போட்டோ எடுத்துள்ளார். இந்த போட்டோக்களில் குஷ்பும் அட்டகாசமாக இருக்கிறார். இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. போட்டோவை பார்த்த பலரும் குஷ்புவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X