யாரையோ நம்பி ஏமாந்து.. சொல்ல முடியாத தனிமையில் இருக்கும் கனகா.. குட்டி பத்மினி ஷாக் தகவல்!
சென்னை: யாரையோ நம்பி ஏமாந்து வெளியில் சொல்ல முடியாத தனிமையில் நடிகை கனகா இருப்பதாக குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1989ம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கனகா.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர், தமிழில் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நடிகை கனகா: 80 மற்றும் 90 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த கனகா, தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவர் தமிழில் கடைசியாக விரலுக்கேத்த வீக்கம் படத்தில் மறைந்த நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளத்தில் வெளியான நரசிம்மம் படத்தில் நடித்திருந்தார்.

பாழடைந்த வீட்டில்: பின் சினிமாவை விட்டு விலகிய கனகா, பாழடைந்த வீட்டிற்குள்ளேயே வீட்டை விட்டு வெளியில் வராமல் சிறையில் இருப்பது போல பல ஆண்டுகாலம் வாழ்ந்து வருகிறார். இதையடுத்து நடிகை குட்டி பத்மினி தனது எக்ஸ் தள பக்கத்தில், கனகாவுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவை ஷேர் செய்திருந்தார். அதில், பல வருடங்களுக்குப் பிறகு என் அன்புக்குரிய தேவிகாவின் மகளும், என் அன்புக்குரிய சகோதரியுமான கனகாவை சந்தித்தது மகிழ்ச்சி என பதிவிட்டு இருந்தார். இந்த போட்டோ மிகப்பெரிய அளவில் வைரலானது.
நடிகை குட்டி பத்மினி பேட்டி: இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி யூடியூப் சேனல் ஒன்றுக்கு, கனகாவை சந்தித்து குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், என் ரசிகர்கள் கனகாவை பற்றி சொல்லுங்க என்று கேட்டார்கள் அவர்களுக்காகத்தான் கனகாவை பார்க்க சென்றேன். அந்த வீட்டின் உள்ளே ஒரே ஒரு லைட் மட்டும் எறிந்துக்கொண்டு இருந்தது. எப்படியாவது கனகாவைப் பார்த்துவிட வேண்டும் என்று இரண்டு மணி நேரம் காருக்குள் அமர்ந்து கொண்டே இருந்தேன், அப்போது தான் கனகா ஆட்டோவில் இருந்து இறங்கினார்.
கஷ்டப்படும் கனகா: எதுக்கு இந்த பழைய வீட்டில் இருக்க இந்த வீடு 20,30 கோடி போகும் அந்த வீட்டில் ஏன் இருக்க, கல்யாணம் பண்ணிக்கல, குழந்தை இல்ல இப்படி இருக்கும் போது இந்த வீட்டை என்ன பண்ண போற, இந்த வீட்டை விற்றுவிட்டு வேறு ஒரு வீடு வாங்கு எதுக்கு இப்படி கஷ்டப்படுற என்று கேட்டேன். அதற்கு எல்லாம் சிரித்துக்கொண்டே சரி சரி என்று கூறினார்.
ஏமாந்து இருக்கிறார்: ஆனால், கனகா யாரையும் சந்திக்கவோ, பேசவோ விரும்பவில்லை, அவங்க அப்படி என்ன ஏமாந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. யாரையோ நம்பி ஏமாந்து இருக்கிறார். இதனால் மீண்டும் யாரையும் நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆனால், கனகா மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார், சிரிக்க சிரிக்கத்தான் பேசினார் என்று நடிகை குட்டி பத்மினி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











