உலகத்தைவிட்டு சீக்கிரம் போய்டனும்..என் சொத்து எல்லாம் ஸ்டாப்க்குத்தான்.. மனம் திறந்த குட்டிபத்மினி!

சென்னை : நடிகை குட்டி பத்மினி என் சொத்து எல்லாம் என் ஸ்டாப்க்கு தான் என பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குட்டி பத்மினி.

இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

Actress Kutty padmini open minded interview

குட்டி பத்மினி : யூடியூப் சேனல் ஒன்று பேட்டி அளித்த குட்டிபத்மினி தனது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், எனக்கு 21 வயது இருக்கும் போது என் அம்மாவின் பிடிவாதத்தால் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அந்த வாழ்க்கை சரியில்லாமல் போனது. அப்போது எனக்கு சிறுவயது காதல் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது.

திருமணம் முக்கியமானது : என் 35வது வயதில் பிரபுவை சந்தித்தேன் அப்போது வாழ்க்கை என்றால் என்ன, காதல் என்றால் என்று புரிந்தது. அவருக்காக, அவருடைய காதலுக்காக தற்கொலை செய்யக்கூட முடிவு செய்தேன். அப்போது அதை நினைத்துப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது. கல்யாணம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. இதனால் அவசரப்படாமல் யோசித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். அம்மா செய்த தவறை செய்து விடாதீர்கள் என்று என் மகள்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

நிம்மதியாக இருக்கிறேன்: நான் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும், என் மகள் இதில் வரவிரும்பவில்லை. எங்களுக்காக எதையும் செய்யாதீங்க நாங்க யாரும் உங்க கம்பெனியை எடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். இதனால், எல்லாத்தையும் விற்றுவிட்டு, கடனை அடைத்துவிட்டு இப்போது நிம்மதியாக இருக்கிறேன்.

Actress Kutty padmini open minded interview

எல்லாம் ஸ்டாப்க்கு தான்: இப்போதும், நான் சம்பாதிப்பதை என் ஸ்டாப்க்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும், நான் இறந்த பிறகு என் புத்தகங்களை சென்னை சிறைச்சாலைக்கும், என் புடவைகள் நாடக கம்பெனிக்கும் உயில் எழுதிவைத்துவிட்டேன். என் கம்பெனியில் அன்றைய தேதியில் என் கணக்கில் என்ன இருக்கிறதோ அவை அனைத்தும் என் ஊழியர்களுக்குத்தான். அதில் கடன் ஏதேனும் இருந்தால் என் பசங்க அடைப்பார்கள். வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்குத்தான் சொத்து உலகத்தைவிட்டு சீக்கிரம் போய்விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சொத்து தேவையில்லை என்று பல விஷயங்கள் பற்றி மனம் திறந்து பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X