சிம்பு எனக்கு என்ன உறவு தெரியுமா? நடிகை குட்டி பத்மினி பகிர்ந்த சுவாரசியத் தகவல்!

சென்னை: ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்... ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்... என குழந்தைப்பருவத்திலே ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் சிலம்பரசன் என்கிற சிம்பு. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து இருக்கும் சிம்புவிற்கு 40 வயதான போதும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். அவர் குறித்து நடிகை குட்டி பத்மினி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.

டி ராஜேந்திரன் இயக்கிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்பு. நடிகர், இயக்குநர், பாடகர் என அடுத்தடுத்து தனது திறமையை வளர்ந்து கொண்டு வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். தற்போது சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து வரும் தக் லைஃப் படம் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

simbu str 48 kutty padmini

சிம்பு: காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த சிம்பு, சினிமாவில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததால், அடுத்தடுத்து தோல்வி திரைப்படத்தை கொடுத்தார். மாநாடு படத்திற்கு பிறகு நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது, சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்டிஆர் 48' படத்தில் நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியின் இரண்டாவது படம் இதுவாகும். கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன போதும், இன்னமும் படப்பிடிப்பு துவங்கவில்லை. படம் குறித்த எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் சிம்பு ரசிகர்கள் அப்டேட்டுக்காக காத்து இருக்கின்றனர்.

simbu str 48 kutty padmini

இப்படி ஒரு உறவா: சிம்பிற்கு 40 வயதான போதும், திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். இதனால் அவரின் ரசிகர்கள், சிம்புவின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பழம பெரும் நடிகை குட்டி பத்மினி, சிம்பு குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை கூறி இருக்கிறார். அதாவது, என் சொந்த அக்கா உஷாவின் மகன் தான் சிம்பு. என் அம்மாவின் சொந்த தங்கை பொண்ணு தான் உஷா. என் அம்மாவிற்கு என்னைவிட உஷாவை தான் மிகவும் பிடிக்கும். திருமண விஷயத்தில், நான் எடுத்த முடிவு என் அம்மாவிற்கு பிடிக்கவில்லை. ஆனால் உஷா, திருமண விஷயத்தில் பெற்றோரின் சம்மதத்தை கேட்டு சரியான முடிவை எடுத்து, டி ராஜேந்தரை திருமணம் செய்து கொண்டார். டி ராஜேந்தர் போல சினிமாவில் ஒரு ஜென்டில்மேன் இல்லை என்று நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை அனைவருக்குமே அது தெரிந்தது தான்.

simbu str 48 kutty padmini

சிம்புவிற்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவின் மீது ஈடுபடு அதிகம், அந்த வயதிலேயே டயலாக்கை கொஞ்சம் கூட தவறே இல்லாமல் அழகாக பேசுவார். அதே போல பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருப்பார் என்று குட்டி பத்மினி அந்த வீடியோவில் சிம்பு பற்றி பேசி இருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலர், அட சிம்புவுக்கும் உங்களுக்கும் இப்படி ஒரு உறவா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X