Srividya : கமலை காதலித்த ஸ்ரீவித்யா.. வாழ்க்கை சீரழிந்த சம்பவம்.. குட்டி பத்மினி சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை : மறைந்த நடிகை ஸ்ரீவித்யா, கமலை உயிருக்கு உயிராக காதலித்தார் என்று குட்டி பத்மினி தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் ரசிகர்களின் இதயங்களில் இன்னும் உயிருடன் இருக்கிறார்.
அவரின் நடிப்பை விட, அவரின் கண் அசைவு ஆயிரம் அர்த்தத்தை சொல்லும்.

கண் அழகி ஸ்ரீவித்யா : இந்நிலையில், பிரபல நடிகையான குட்டி பத்மினி, தனது சொந்த சேனலில் பல முன்னணி நடிகைகள் குறித்து சுவாரசியமான பல தகவல்களை பேசி வருகிறார். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் ஸ்ரீ வித்யா போல ஒரு அழகான நடிகையை நான் இதுவரை பார்த்தது இல்லை. அவரது கண் அவ்வளவு அழகாக இருக்கும்.
கமல் மீது காதல் : அவர் கமல்ஹாசனுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். அப்போது, கமல்ஹாசன் மீது ஸ்ரீவித்யாவுக்கு ஒரு ஈடுபாடு வந்தது. கமலை பிடிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு நடிகைகளே ரசிகர்களாக இருந்தார்கள். அது போலத்தான் கமலின் நடிப்பைப் பார்த்து ஸ்ரீவித்யாவுக்கு அவர் மீது பைத்தியக்காரத்தனமான காதல் இருந்தது.

கிசுகிசுவில் கமல் : நான் கமலுடன் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது கமல், வாணி கணபதியை காதலித்துக் கொண்டிருந்தார். வாணிக்காக அவர் ஏர்போர்ட்டில் கிஃப்ட் வாங்கினார். அதே போல இந்தி நடிகை ரேகாவுடனும் கமலின் பெயர் அடிபட்டு வருகிறது. இதனால், இந்த காதல் கீதல் எல்லாம் வேண்டாம் என்று ஸ்ரீவித்யாவிடம் நேரடியாகவே சொன்னேன். ஆனால், நான் சொன்னதை ஸ்ரீவித்யா ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆறு நடிகைகளை காதலித்த கமல் : ஆனால், அந்த காலத்தில் கமல் ஒரே நேரத்தில் ஆறு பெண்களை காதலித்தார். ஸ்ரீவித்யா, பாலிவுட் நடிகை ரேகா, ஜெய சுதா, வாணி கணபதி மேலும் இரண்டு நடிகைகள் இருக்கிறார்கள். அத்தனை நடிகைகளையும் அவர் எப்படி சமாளித்தார் என்றே தெரியவில்லை. இதனால்தான் அவருக்கு சகலகலா வல்லவன் என்று பெயர் வந்து இருக்குமோ என்று குட்டி பத்மினி நகைச்சுவையாக பேசினார்.

தனிமையில் ஸ்ரீவித்யா : மேலும் தொடர்ந்து பேசிய குட்டி பத்மினி, கமல், வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டதால், ஸ்ரீவித்யா மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். இதில் இருந்து அவரால் பல ஆண்டுகள் மீண்டு வரவே முடியவில்லை. இந்த நேரத்தில் தான் ஸ்ரீவித்யா, ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஜார்ஜ் இவர்களிடம் இருந்த பணம் சொத்து என அனைத்தையும் அபகரித்துக்கொண்டு அவரை நட்டாத்தில் விட்டுவிட்டார். அதன் பின் ஜார்ஜிடம் இருந்து விவகாரத்து பெற்று பிரிந்து ஸ்ரீவித்யா தனிமையில் வாழ்ந்தார்.
அனாதையாக இறந்தார் : இதில் இருந்து மீண்டு வந்த ஸ்ரீவித்யா மீண்டும் மலையாளப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின் புற்றுநோய் காரணமாக சினிமாவில் இருந்து விலகிய அவர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். அதனால் கடைசி காலத்தில் யாரையுமே சந்திக்காத ஸ்ரீவித்யா, கமல்ஹாசனை பார்க்க விரும்பினார். அதன்படியே கமலும் அவரை சந்தித்தார். புற்றுநோயுடன் போராடி வந்த ஸ்ரீத்யா 2006ஆம் ஆண்டு கேரளாவில் அனாதையாக இறந்தார் என்று குட்டி பத்மினி கண்ணீருடன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











