Sridevi :ஸ்ரீதேவியை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கிய அம்மா.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை : நடிகை ஸ்ரீதேவியை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கியது அவரது அம்மா தான் என பிரபல நடிகை அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

தயாரிப்பாளுரும், நடிகையுமான குட்டி பத்மினி பல படங்களில் நடித்துள்ளார். ஏராளமான சீரியல்களையும் தயாரித்துள்ளார்.

மூத்த நடிகையான குட்டி பத்மினி சினிமா துறை சம்பந்தமான சில விஷயங்களை வெளிப்படையாக தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.

Actress Kutty padmini shared many secrets information about sridevi

நடிகை ஸ்ரீதேவி :அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி குறித்து பல தகவல்களை பேசி உள்ளார். அதில், நான் ஸ்ரீதேவியை நான்கு வயதாக இருக்கும் போது பார்த்தேன், அவரது அம்மா நிறைய படங்களில் டான்ஸ் ஆடி இருக்கிறார். ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்கள். நம்நாடு படத்தின் போது தான் எனக்கு ஸ்ரீதேவியுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஷூட்டிங்கிற்காக அவங்க வீட்டிற்கு பிக்கப் பண்ண வண்டிபோகும் அப்போது நானும் போவேன். வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு சின்ன வீடு, ஒரே ஒரு ரூம் மட்டும் தான் இருக்கும்.

பிரம்மாண்டமான வீடு : அப்படி இருந்த ஸ்ரீதேவி பிற்காலத்தில் தனது திறமையாலும், நடிப்பாலும் வளர்ந்து வந்து திநகர் சிஐடி காலனியின் ஒரு பிரம்மாண்டமான வீட்டை வாங்கினார். மிகவும் பிரம்மாண்டமான அந்த வீடு பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். கிரஹப்பிரவேசத்திற்கு நான் போய் இருந்தேன் அந்த வீட்டைப்பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

Actress Kutty padmini shared many secrets information about sridevi

கமலை விரும்பிய ஸ்ரீதேவி : கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்த ஸ்ரீதேவிக்கு அவர் மீது தனி அன்பு உண்டு. நடிகை ரேகா பற்றியும் கமல் பற்றி கிசுகிசு எழுந்த போது அதை நினைத்து பலமுறை வருத்தப்பட்டார். அந்த காலத்தில் கமலுடன் யார் சேர்ந்து நடித்தாலும் நிச்சயம் அவர் மீது காதல் வந்துவிடும் அது போலத்தான் ஸ்ரீதேவிக்கும் அவர் மீது காதல் வந்தது. கடைசியில் கமல் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார்.

Actress Kutty padmini shared many secrets information about sridevi

குடிக்கு அடிமையானார் : தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என கொடி கட்டிப்பறந்த ஸ்ரீதேவி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து டாப் நடிகையானார். பிரபலமான நடிகையாக ஸ்ரீதேவி வளர்ந்து வருவதை பார்த்த அவரது தாய், தன் மகள் தன்னை மீறி போய்விடக்கூடாது என்பதற்காக ஷூட்டிங் முடிந்ததுமே அவருக்கு ஒயின் கொடுத்து தூங்கவைத்து விடுவார்கள். பெற்ற தாயே சுயநலத்திற்காக ஸ்ரீதேவிக்கு குடிப்பழக்கத்தை கற்று கொடுத்ததால், பின் நாளில் ஸ்ரீதேவி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் என்று ஸ்ரீதேவி குறித்து பல ரகசியங்களை குட்டி பத்மினி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X