நடிகையை பெல்டால் அடித்து கொடுமைப்படுத்திய கணவன்...பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை : பிரபல நடிகையை அவரது கணவர் பெல்டால் அடித்து கொடுமைப்படுத்தினார் என்று நடிகை குட்டி பத்மினி பகீர் தகவலை கூறியுள்ளார்.

சினிமா தயாரிப்பாளுரும், நடிகையுமான குட்டி பத்மினி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். குழந்தையும் தெய்வமும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார்.

குட்டி பத்மினி சினிமா துறையினர் சம்பந்தமான சில விஷயங்களை வெளிப்படையாக தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.

Actress Kutty padmini shared unknown information about Sujatha in her video

நடிகை சுஜாதா : அந்த வீடியோவில், நானும் சிவகுமார் அவர்களும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது தான், பாலச்சந்தர் நடிகை சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின், அவர்கள் படத்தின் மூலம் அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவங்களைப்பார்க்கும் போதே ரொம்ப மென்மையாகவும், அழகு பதுமையாகவும் இருந்தார். அவர்களுடையே கண், மான் கண்போல அவ்வளவு அழகாக இருக்கும்.

நடிக்க பிடிக்கவில்லை : சுஜாதா சினிமாவில் நடித்த வரை அவர்கள் மீது ஒரு அவப்பெயரும் வந்தது இல்லை. அவருடையே நடிப்பு ரொம்ப கண்ணியமாக இருக்கும். அதே போல பொது இடத்திலோ, பொது நிகழ்ச்சிக்கோ நாங்கள் போகும் போது மோசமான கமெண்ட் வந்தது இல்லை அந்த அளவுக்கு மக்கள் சுஜாதாவை தனது குடும்பத்தில் ஒரு பெண்ணாக பார்த்தனர். பல வெற்றிப்படங்களை கொடுத்து திறமையான நடிகை என பெயர் எடுத்தாலும், சுஜாதாவிற்கு நடிக்க பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

Actress Kutty padmini shared unknown information about Sujatha in her video

காதல் திருமணம் : சுஜாதாவிற்கு எப்படியாவது சினிமாவை விட்டு விலகி வேண்டும், இந்த போலித்தனமான வாழ்க்கை வேண்டாம் என்று நினைத்ததால், ஜெயகர் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்கலாம் என்று சொன்ன அவரது கணவர், அதன் பின் இப்படி நடி, அப்படி நடி என்று பல கண்டிஷன்களை போட்டு சுஜாதாவை கொடுமைப்படுத்தினார். ஜெயகர் ஆண் ஆதிக்க மனம் கொண்டவர், கர்வம், தலைக்கனம் பிடித்தவர் போல நடந்து கொள்வார் அவரை எப்படி சுஜாதா காதலித்தார்கள் என்பது தான் புரியாத புதிர்.

பெல்டால் அடித்தார் : சுஜாதா தனது கணவருடன் எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் ஒரு வீட்டின் கீழ் பகுதியில் ஊறுகாய் கம்பேனி நடத்திக்கொண்டு மேல் வீட்டில் குடியிருந்தார்கள். ஒரு நாள் சுஜாதாவை அவரது கணவர் ஜெயகர் பெல்டால் அடிக்கும் சத்தமும், சுஜாதா வலி தாங்கமுடியாமல் அழும் சத்தமும் எங்களுக்கு கேட்டது. நானும் அம்மாவும் ஓடிச்சென்று தடுத்தோம் அப்போதும் சுஜாதா பெருமையாக எதையும் பேசாமல் அழுக்கொண்டே இருந்தார்.

Actress Kutty padmini shared unknown information about Sujatha in her video

இறந்தது கூட யாருக்கும் தெரியாது : அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த வீட்டை காலி செய்து விட்டார்கள். எங்கு போனார்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. அவர் இறந்த செய்திக்கூட யாருக்கும் தெரியவில்லை. விஷயம் தெரிந்த ஒன்றிரண்டு நடிகர்கள் மட்டும் தான் சுஜாதாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்கள் என்று நடிகை குட்டி பத்மினி தனது வீடியோவில் உருக்கமாக பேசியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X