தினமும் சரக்கு.. கைக்குள் வைத்திருந்த அம்மா..குடிக்கு அடிமையானாரா ஸ்ரீதேவி.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை : தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படத்தை கொடுத்தவர் நடிகை ஸ்ரீ தேவி. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று, லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்து நம்பர் ஒன் நடிகை ஆனார். இவர் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான்வி, குஷி என்கிற மகள்கள் இருக்கும் நிலையில், தனது 54வது வயதில் ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

இந்நிலையில், தயாரிப்பாளரும், நடிகையுமான குட்டி பத்மினி, தனக்கு சொந்தமான KPTV Youtube சேனலில் நடிகை ஸ்ரீதேவி குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார். அதில், ஸ்ரீதேவியை தனது கைக்குள் வைத்துக்கொள்ள, குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கியதே அவரது அம்மா தான் என அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

actress sridevi kutty padmini interview

நடிகை ஸ்ரீதேவி குறித்து பல தகவல்களை அந்த வீடியோவில் பேசி உள்ளார். அதில், எனக்கு ஸ்ரீதேவியை நான்கு வயதாக இருக்கும் போதே தெரியும். அவரது அம்மா நிறைய படங்களில் டான்ஸ் ஆடி இருக்கிறார். ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நம்நாடு படத்தின் போது தான் எனக்கு ஸ்ரீதேவியுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் போதுதான் எனக்கு ஸ்ரீதேவியுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. ஷூட்டிங்கிற்காக அவங்க வீட்டிற்கு பிக்கப் பண்ண வண்டிபோகும் அப்போது நானும் ஸ்ரீதேவியும் சேர்ந்துத்தான் வருவோம்.

கடுமையான உழைப்பு: ஸ்ரீதேவியின் வீடு வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு சின்ன வீடு, ஒரே ஒரு ரூம் மட்டும் தான் இருக்கும். அப்படி ஒரு சிறிய வீட்டில் தான் ஸ்ரீதேவி இருந்தாங்க. அப்படி இருந்த ஸ்ரீதேவி பிற்காலத்தில் தனது திறமையாலும், நடிப்பாலும் வளர்ந்து மிகப்பெரிய நடிகையாகி, திநகரில் சிஐடி காலனியில் ஒரு பெரிய பிரம்மாண்டமான வீட்டை வாங்கினார். அந்த வீடு பெரிய பங்களா, அந்த வீட்டை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். கிரஹப்பிரவேசத்திற்கு நான் போய் இருந்தேன் அந்த வீட்டைப்பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். அது எல்லாமே ஸ்ரீதேவியின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த பரிசு.

கமலை காதலித்த ஸ்ரீதேவி: ஸ்ரீ தேவி கமலுடன் பல படத்தில் சேர்ந்து நடித்து இருக்கிறார். நிறைய ரசிகர்களுக்கு ஸ்ரீதேவி, கமல் ஜோடியை திரையில் பார்க்க ரொம்ப பிடிக்கும். ஏன் என்றால், கமலின் அழகுக்கு ஈடுகொடுக்கும் நடிகையாக ஸ்ரீதேவி இருப்பார். கமலுடன் சேர்ந்து நடித்த ஸ்ரீதேவிக்கு அவர் மீது தனி அன்பு உண்டு. ஆனால், அந்த நேரத்தில், பாலிவுட் நடிகை ரேகா பற்றியும் கமல் பற்றியும் நிறைய கிசுகிசு வரும். அதையெல்லாம் பார்த்து, பலமுறை ஸ்ரீதேவி என்னிடம் வருத்தப்பட்டு பேசுவார். அந்த காலத்தில் கமலுடன் யார் சேர்ந்து நடித்தாலும் நிச்சயம் அவர் மீது காதல் வந்துவிடும், ஏன் என்றால் அந்த அளவுக்கு அழகாகவும், திறமையான நடிகராகவும் கமல் இருந்தார். அது போலத்தான் ஸ்ரீதேவிக்கும் அவர் மீது காதல் வந்தது. கடைசியில் கமல்ஹாசன், வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார்.

குடிப்பழக்கம்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என கொடி கட்டிப்பறந்த ஸ்ரீதேவி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து டாப் நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருந்தார். பிரபலமான நடிகையாக ஸ்ரீதேவி வளர்ந்து வருவதை பார்த்த அவரது தாய், தன் மகள் தன் கை மீறி போய்விடக்கூடாது என்பதற்காக ஷூட்டிங் முடிந்ததுமே அவருக்கு ஒயினை ஊற்றிக்கொடுத்து தூங்கவைத்து விடுவார்கள். பெற்ற தாயே சுயநலத்திற்காக ஸ்ரீதேவிக்கு குடிப்பழக்கத்தை கற்று கொடுத்தார். பின் நாளில் ஸ்ரீதேவிக்கு அதுவே பழக்கமாக, ஒயின் இல்லை என்றால் உறக்கம் வராது என்ற நிலைக்கு வந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். ஸ்ரீதேவியின் அகால மரணத்திற்கு அவரின் அம்மா செய்த தவறான பழக்கமும் காரணம் என்று குட்டி பத்மினி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X