குஷ்பு தற்போது சேது மருத்துவமனையில் முக அழகு சீரமைப்புக்கு சென்றுள்ளார்
Recommended Video
சென்னை : சேதுவை நாம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பாரத்திருப்போம் ,அந்த படத்தின் நாயகனே அவர் தான் ,அந்த படம் தான் அவருக்கு சினிமாவில் அறிமுகமும் கூட .அடிப்படையில் மருத்தவரான நடிகர் சேது நடிக்க வருவதற்கு முன்னும் சரி தற்போதும் சரி மருத்துவமே பார்த்து வருகிறார் .கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்திற்கு பிறகு சேது 'வாலிப ராஜா' படத்தில் கதநாயகனாக நடித்திருந்தார் , அதற்கு பிறகு சந்தானம் கதாநாயகனாக நடித்த 'சக்க போடு போடு ராஜா' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .
சேது முகம் மற்றும் தோல் நிபுனர் , அவரின் 'ஜி கிளினிக்' மூலம் பலரையும் அழகு படுத்தி உள்ளார் .பல நடிகர் மற்றும் நடிகைகள் இவரின் மருத்துவ மனையில் மருத்துவம் பார்த்து வருகிறார்கள் .ஒரு நிகழ்ச்சியின் போது கூட பாபி சிம்ஹா மற்றும் வெங்கட் பிரபு இவரிடம் மருத்துவம் பார்த்து வருவதாகவும் சேது ஒரு சிறந்த மருத்துவர் என்றும் கூறினார்கள்.

தற்போது இவரின் மருத்தவமனைக்கு மருத்துவம் பார்த்து தனது அழகை மேம்படுத்த நடிகை குஷ்பு சென்றிருக்கிறார் . அப்போது குஷ்புவுடன் டாக்டர் சேது எடுத்த புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் .அதனுடன் தான் குஷ்புவின் சிரிப்புக்கு ரசிகன் என்றும் கூறியிருக்கிறார் .

குஷ்பு தற்போது சன் தொலைக்காட்சியில் இரவு ஒளிப்பரப்பாகும் 'லஷ்மி ஸ்டோர்ஸ்' நெடுந்தொடரில் நடித்து வருகிறார் . கடைசியாக குஷ்புவின் கணவர் சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை-2' படத்தில் ஒரு பாடலுக்காக வந்து சென்றிருப்பார். அதற்கு முன் சுந்தர்.சியின் ஆம்பள படத்தில் ஒரு பாடல் காட்சியில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார்



Click it and Unblock the Notifications











