Actress Laila: காதலிக்கும் காலம் போய்விட்டது.. லைலா சொன்னத பாருங்க!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் சென்னையில் முதல்கட்டமாக நடத்தப்பட்டது. இதில் பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதையடுத்து தற்போது தாய்லாந்தில் படத்தின் சூட்டிங் இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகை லைலா முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளார். படத்தின் பூஜையில் இவரை பார்க்க முடிந்தது.

Actress Laila joined with Vijays Thalapathy 68 movie in Re entry

விஜய்யின் தளபதி 68: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. முதல் கட்டமாக சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ராஜூ சுந்தரம் இந்தப் படத்திற்கு நடனம் அமைத்துள்ள நிலையில் கலக்கலான பாடலாக இந்தப் பாடல் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

தாய்லாந்தில் சூட்டிங்: இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் தற்போது தாய்லாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது. பாங்காக்கின் புறநகர் பகுதிகளில் இந்த சூட்டிங் நடத்தப்பட்டுவரும் சூழலில் படத்திற்கான அடுத்தக்கட்ட ஆக்ஷன் காட்சிகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் தாய்லாந்து புறப்பட்டு சென்றுள்ள விஜய், உடனடியாக சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

பூஜை வீடியோ: இந்தப் படத்தின் பூஜை கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் நடந்த நிலையில், இதன் வீடியோவை கடந்த மாதம் 24ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த பூஜையில் படத்தின் நடிகர்கள் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதன் கலர்புல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகை லைலா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

Actress Laila joined with Vijays Thalapathy 68 movie in Re entry

லைலா ரீ என்ட்ரி: கள்ளழகர் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர், தொடர்ந்து பிதாமகன், முதல்வன், தீனா, ரோஜாவனம், நந்தா, பரமசிவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடந்த 2006ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன லைலா சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இதனிடையே கடந்த 2022ம் ஆண்டில் வெளியான வதந்தி என்ற வெப் தொடரில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது விஜய்யுடன் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இடைவெளிக்கான காரணம்: இதனிடையே குழந்தைகளை வளர்ப்பதற்காகவே தான் சினிமாவில் இருந்து விலகியிருந்ததாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் லைலா தெரிவித்துள்ளார். அவர்கள் தற்போது வளர்ந்துவிட்ட சூழலை தான் மீண்டும் நடிக்க முடிவெடுத்ததாகவும் ஆனால் தனக்கு வந்த கதைகள் எல்லாம் அம்மா, அக்கா வேடங்கள்தான் என்றும் அதனால் தான் நடிக்காமல் இருந்ததாகவும் கூறிய லைலா, டிவி சேனல்களில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் தனக்கு அதில் விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.

தளபதி 68 பூஜையில் லைலா: தற்போது படங்களில் நாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் காதலிக்கும் காலம் போய்விட்டதாகவும் நல்ல கதைகள் குவிந்துக் கொண்டே இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனக்கு சிறப்பான கேரக்டர்கள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். லியோ பட பூஜையில் கலக்கலாக கலந்துக் கொண்ட லைலா, விஜய்யுடன் உற்சாகமாக கட்டித்தழுவி தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X