அழகிய லைலாவின் இளமை மாறா லேட்டஸ்ட் பிக்ஸ்.. மறுபடியும் ஹீரோயினா நடிக்கிறாங்களா?
சென்னை : தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத வெகு சில நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை லைலா.
கன்னக்குழி அழகு எப்போதும் சிரித்த முகம், அசாத்தியமான நடிப்புத் திறமை என பல ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் நடித்து அசத்தி வந்தார்.
திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருக்கும் லைலா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் அசந்து போன நிலையில் இப்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கண்ணியமான கதாபாத்திரம்
இந்திய சினிமாவின் பொற்காலம் என அழைக்கப்படும் 90களில் அறிமுகமான வெகு சில திறமையான மற்றும் தனித்துவமான நடிகைகளில் நடிகை லைலாவும் ஒருவர். எப்பொழுதும் சிரித்த முகம் கன்னக்குழி அழகு துறுதுறுப்பான நடிப்பு, கவர்ச்சி காட்டாத கண்ணியமான கதாபாத்திரங்கள் என தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர்.

கதாநாயகியாக தமிழில்
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவான கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட லைலா இன்று வரை தனக்கான தனி ரசிகர் கூட்டத்தை கொண்டு உள்ளார்.

பல விருதுகளை வென்று
எக்கச்சக்கமான வெற்றித் படங்களில் நடித்திருக்கும் லைலா சிறந்த நடிகைக்காக பல விருதுகளை வென்றுள்ளார். பிதாமகனில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்ததோடு அதில் இவரின் நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

திருமணத்திற்குப் பிறகு
முதல்வன், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, நந்தா, அள்ளித்தந்த வானம், தில், உன்னை நினைத்து, பிதாமகன், உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல் என எக்கச்சக்கமான வெற்றித் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

அதே இளமையுடன்
இன்றளவும் இவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாத உயரத்தை எட்டி இருக்கும் லைலா, மீண்டும் ரசிகர்களை திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க, முன்பு திரைப்படங்களில் பார்த்ததைப் போல கொஞ்சம் கூட மாறாமல் அதே இளமையுடன் இப்போதும் இருக்கும் லைலா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மிகவும் லட்சணமாக
இன்றளவும் இவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாத உயரத்தை எட்டி இருக்கும் லைலாவை , ரசிகர்களை மீண்டும் திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க, முன்பு திரைப்படங்களில் பார்த்ததைப் போல கொஞ்சம் கூட மாறாமல் அதே இளமையுடன் இப்போதும் இருக்கும் லைலா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











