இந்த லாக்டவுன் இப்படி ஆக்கிடுச்சே? மரமேறி மாங்காய் பறித்த பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு அசத்தல்!
சென்னை: லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் பிரபல நடிகை மரமேறி மாங்காய் பறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ள இவர், பல வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான மோகன்பாவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்ற மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர்.

காற்றின் மொழி
மூன்று பேரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். லட்சுமி மஞ்சு தமிழில், ஆதி நடித்த மறந்தேன் மன்னித்தேன், மணிரத்னம் இயக்கிய கடல், ராதா மோகன் இயக்கிய காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். டிவி.தொடர்களிலும் நடித்துள்ளார். இப்போது வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்புகள் ரத்து
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த வைரஸின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள்ம் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர்.

ரசிகர்கள்
இந்த லாக்டவுனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை வீடியோவாகவும் போட்டோவாகவும் அவர்கள் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதை ஏராளமான ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். அவர்களுக்கும் வேறு பொழுது போக்கு இல்லை என்பதால், நடிகர், நடிகைகளின் சமூகவலைத்தளப் பக்கங்களை பின் தொடர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மாமரத்தில் ஏறினார்
இந்நிலையில், நடிகை லட்சுமி மஞ்சு, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனது வீட்டின் மெயின் கேட்டின் முன் உள்ள, மாமரத்தில் ஏறி, ஒரு கிளையில் அமர்கிறார். மரத்தில் மாங்காய்கள் கொத்துக்கொத்தாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றை அழகாகப் பறிக்கிறார் லட்சுமி. அதை கீழே நிற்கும் தனது மகளுக்கு கொடுக்கிறார்.

நேரம் இருந்ததில்லை
இந்த வீடியோவுக்கான கேப்ஷனில், 'எனக்கு சிறுவயதாக இருக்கும்போதே, இந்த மாமரம் எங்கள் வீட்டில் இருக்கிறது. ஆனால் ஒரு நாளும் அதற்கு ஹாய் சொல்லவோ, வீட்டில் சுற்றுப்புறத்தை அது எவ்வளவு இனிமையாக வைத்திருக்கிறது என்பதைக் கவனிக்கவோ எனக்கு நேரம் இருந்ததில்லை. ஆனால், இப்போது நான் கவனிக்காத விஷயங்களை எடுத்துக்கொண்டு மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இப்படி மாத்திடுச்சே?
இதற்கு ரசிகர்கள் சிலர், இந்த லாக்டவுன் நடிகைகளை இப்படி மாத்திடுச்சே? என்று கூறியுள்ளனர். சின்ன வயசுல நாங்களும் ஏறியிருக்கோம், இப்ப முடியலை என்று சிலரும், இந்த மரம் என்ன உங்க வீட்டு டெர்ரஸ்லயா இருக்கு? என்று சிலரும் கேட்டுள்ளனர். 'இந்த நேரத்துல நாலு பேருக்கு உதவி பண்றதை விட்டு இதை பண்ணிட்டு இருக்கீங்களே? என்று சில ரசிகர்கள் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











