“ஒரே குட்டையில் ஊறிய மட்டை“..ரேஹாவுக்காக பரிந்து பேசி..வாங்கி கட்டிக்கொண்ட லட்சுமி மஞ்சு !
மும்பை : நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை மரணம் வழக்கில் பல்வேறு திருப்பங்களுடன் கிடுக்கிப்பிடி விசாரணையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருபவர் ரேஹா சக்கரவர்த்தி.
போதைப் பொருள் சப்ளை செய்தது மற்றும் பேங்கில் இருந்து பல கோடி ரூபாய் எடுத்தது உள்ளிட்ட ஆதாரங்களால் இவர் இப்பொழுது போலீசாரிடம் விழி பிதுங்கிப் போய் சிக்கிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ஆதரவாக ஒரு சில நடிகைகள் குரல் கொடுத்து இப்பொழுது அந்த வரிசையில் நடிகை லட்சுமி மஞ்சுவும் இணைந்திருக்கிறார். இதற்கிடையில் இப்பொழுது லக்சுமி மஞ்சு ரேஹா சக்கரவர்த்திக்கு ஆதரவாக ட்விட் ஒன்றை பதிவிட்டதற்கு நெட்டிசன்கள் செம்மையாக அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளும் திருப்பங்களும்
கடந்த ஒரு சில மாதங்களாகவே நம் அனைவராலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வரும் செய்திகளில் ஒன்று சுஷாந்த் சிங் தற்கொலை மரணம் பற்றிய விசாரணைகளும் திருப்பங்களும்.

சுஷாந்த் சிங்கின் காதலி
மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் நடக்கின்ற நெப்போடிசம் தான் என பலராலும் சாடப்பட்டு சல்மான்கான், கரண் ஜோகர், அலியா பட் உள்ளிட்ட திரைப் பிரபலங்களின் மீது சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது முழு சந்தேகமும் சுஷாந்த் சிங்கின் காதலி ரேஹா சக்கரவர்த்தியின் மீது திரும்பியுள்ளது.

பல கோடி ரூபாய்
சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருள் சப்ளை செய்தது மற்றும் அவரது பேங்க் அக்கவுண்டில் இருந்து பல கோடி ரூபாய் எடுத்தது உள்ளிட்ட பல ஆதார தகவல்கள் இந்த வழக்கிற்கு தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருப்பதால் ரேஹா இந்த தற்கொலையில் முக்கிய குற்றவாளியாக தொடர்ந்து விசாரணையில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ஆதரவாகவும்
இந்நிலையில் ரேஹாவின் வாட்சப் ஷாட் உள்ளிட்டவைகளை பார்த்த பலரும் அதிர்ந்து போய் இவர்தான் முக்கிய குற்றவாளி என சொல்லி வரும் நிலையில் இவருக்கு ஆதரவாகவும் பல பிரபலங்கள் களத்தில் இறங்கி குரல் கொடுத்து வருகின்றனர். அதில் தற்பொழுது நடிகை லட்சுமி மஞ்சுவும் இணைந்துள்ளார்.

ஆதரவு ட்வீட்
தமிழில் காற்றின் மொழி, கடல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக உள்ளவர் லட்சுமி மஞ்சு. இவர் ரேஹா சக்கரவர்த்திக்கு ஆதரவு தரும் வகையில் இப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதயம் உடைந்துவிட்டது
பத்திரிகையாளர்கள் பலரும் செய்தி சேகரிக்க பெருந்திரளாக நின்றிருக்க அதில் கண்ணீர் மல்க அழுதவாறு நடந்துவரும் ரேஹாவின் புகைப்படத்தை பதிவிட்டு லட்சுமி கூறியதாவது " இது வெறுப்பின் உச்சம், ஒரு பெண்ணை நடத்துவதற்கான சரியான முறை அல்ல. இப்படி ஒரு அச்சமூட்டும் நபர்களாக நாம் மாறி மனிதர்களாக வாழும் தகுதியை இழந்து விட்டோம். இதைப் பார்க்கும்போது எனது இதயம் உடைந்துவிட்டது" இவ்வாறு லட்சுமி மஞ்சு தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டை
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரேஹா சக்கரவர்த்தியை மட்டும் போலீஸார் இப்படி நடத்தவில்லை, சாட்சி கூற வந்த சுஷாந்த் சிங்கின் தங்கையையும் அப்பாவையும் இவ்வாறே நடத்தினார்கள். தேவை இல்லாமல் இங்கு ரேஹாவுக்கு வரிந்து கட்டி அனுதாபத்தை பெற முயலாதீர்கள் எனவும், இன்னும் ஒரு சிலர் நீங்களும் ரேஹாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை எனவும் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











