சந்திரமுகி 2 படத்தை தொடர்ந்து ஈரம் பட கூட்டணியில் இணைந்த லட்சுமி மேனன்!
சென்னை : நடிகை லட்சுமி மேனன் சில காலங்கள் படிப்பில் கவனம் செலுத்துவதற்காக படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் பிசியாகி வருகிறார்.
கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்துவருகிறார் லட்சுமி மேனன். இதனிடையே அவரது அடுத்தப்பட அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

நடிகை லட்சுமி மேனன்
நடிகை லட்சுமி மேனன் தமிழில் கும்கி படம் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னுடைய அறிமுகத்தை சிறப்பாக அமைத்துக் கொண்டார். தொடர்ந்து சுந்தரப்பாண்டியன், பாண்டியநாடு, ஜிகிர்தண்டா, நான் சிவப்பு மனிதன், றெக்க, கொம்பன் என்று அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

படிப்பில் கவனம்
கடந்த 2016ம் ஆண்டில் றெக்க என்ற படத்தில் நடித்ததுடன் தான் படிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறி நடிப்பிலிருந்து விலகினார். தொடர்ந்து கடந்த ஆண்டில் மீண்டும் இவரது நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது.

சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன்
இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்சுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் மைசூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான செட் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் 3வது கட்ட சூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு சார்பில் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

அறிவழகன் இயக்கத்தில் லட்சுமி மேனன்
இதனிடையே அடுத்ததாக இயக்குநர் அறிவழகன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகவுள்ள சப்தம் என்ற படத்தில் லட்சுமி மேனன் கமிட்டாகியுள்ளார். படத்தின் நாயகனாக ஆதி இணைந்துள்ளார். முன்னதாக ஈரம் என்ற படத்தில் இந்தக் கூட்டணி இணைந்து வித்தியாசமான கதைக்களத்தில் படத்தை கொடுத்த நிலையில் தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

மீண்டும் இணைந்த ஈரம் கூட்டணி
இந்தப் படத்தில்தான் தற்போது லட்சுமி மேனன் நாயகியாக இணைந்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் அறிவழகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். ஈரம் படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹாரர் த்ரில்லர் படம்
ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் மூணாறு பகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது. 7ஜி பிலிம்சுடன் இணைந்து இந்தப் படத்தை தனது ஆல்பா பிரேம்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார் அறிவழகன்.


Click it and Unblock the Notifications











