சந்திரமுகி 2 படத்தில் இணையும் பிரபல நடிகை.. த்ரிஷாவை தொடர்ந்து லிஸ்ட்டில் சேர்ந்த கும்கி நாயகி!

சென்னை : ரஜினி, நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் சந்திரமுகி.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சந்திரமுகி படம்

சந்திரமுகி படம்

நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ல் வெளியான படம் சந்திரமுகி. இந்தப் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினார்கள்.

சந்திரமுகி 2 படம்

சந்திரமுகி 2 படம்

இந்நிலையில் 17 ஆண்டுகள் கடந்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் மீண்டும் வெளியாகவுள்ளது. முதல் படத்தை இயக்கிய பி வாசுவே இந்தப் படத்தையும் இயக்கவுள்ளார். படத்தில் ரஜினிக்கு பதிலாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். அவருக்கு பிரபல நடிகை த்ரிஷா ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 பிரம்மாண்டமாக உருவாகும் சந்திரமுகி2

பிரம்மாண்டமாக உருவாகும் சந்திரமுகி2

இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் காமெடி கலாட்டா செய்து அசத்திய நடிகர் வடிவேலு இந்தப் படத்திலும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

 படத்தில் இணைந்த லக்ஷ்மி மேனன்

படத்தில் இணைந்த லக்ஷ்மி மேனன்

படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது லஷ்மி மேனனும் படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் வரும் 15ம் தேதி மைசூரில் துவங்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

மைசூருவில் சூட்டிங்

மைசூருவில் சூட்டிங்

15ம் தேதி துவங்கி தொடர்ந்து 30 நாட்கள் இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரமுகி படம் சிறப்பான காட்சி அமைப்புகள் மற்றும் திரைக்கதையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் காமெடி கலாட்டாக்களும் அதிரடி க்ளைமாக்சும் இதுநாள் வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக கணப்படுகிறது. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் ரஜினியின் கேரக்டரை லாரன்ஸ் சிறப்பாக கொண்டுவருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Recommended Video

Lawrence படத்தில் Trisha-வை தொடர்ந்து list-ல் சேர்ந்த Lakshmi Menon Kollywood | Filmibeat Tamil
லக்ஷ்மி மேனன் ரீ-என்ட்ரி

லக்ஷ்மி மேனன் ரீ-என்ட்ரி

நடிகை லஷ்மி மேனன், கும்கி உள்ளிட்ட சிறப்பான பல படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து தான் படிக்கப் போவதாக பீல்ட் அவுட் ஆனார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் தன்னுடைய கம்பேக்கை கொடுக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவர் கமிட்டாகும்போது அது அவருக்கு சிறப்பான ரீ என்ட்ரியை கொடுக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X