சினிமாவ மூட்டைகட்டிட்டு கல்யாணம் செய்து கொள்ள கூறிய ரசிகர்.. லக்ஷ்மி மேனன் ரெஸ்பான்ஸ பாருங்க!
சென்னை: சினிமாவை மூட்டைக்கட்டிவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாக கூறிய ரசிகருக்கு நடிகை லக்ஷ்மி மேனன் கூறிய பதில் வைரலாகி வருகிறது.
நடிகை லக்ஷ்மி மேனன் கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். சுந்தரப்பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் லக்ஷ்மி மேனன்.
தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியாநாடு, வேதாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார்.

போட்டோக்கள்
பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன், வீட்டில் நடனம் கற்று வருகிறார். தான் நடனம் கற்கும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஸ்க்ரீன் ஷாட்
அந்த வகையில் நடிகை லக்ஷ்மி மேனன் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த ஸ்டோரியில், தான் வளர்க்கும் பூனையை மடியில் வைத்து டான்ஸ் ஆடியிருக்கிறார். அதோடு தன்னை சினிமாவை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாக சொன்ன ரசிகரின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

பரிதாபமானது
மேலும் அந்த ரசிகருக்கு நச் பதிலடியும் கொடுத்துள்ளார். அதற்கு வளருங்கள் என கேப்ஷன் கொடுத்துள்ள லக்ஷ்மி மேனன், "இந்த அன்பான, தாழ்மையான, என் மீது அக்கறையுள்ள இவரைப் பாருங்கள் என்னைப் போன்ற ஒரு தேவதை யாரையாவது திருமணம் செய்துகொண்டு என் அமைதியைக் காண வேண்டும் என்று நினைக்கிறார். பரிதாபமானது வெறும் பரிதாபகரமானது". என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸில்?
நடிகை லக்ஷ்மி மேனன் தற்போது மீண்டும் படங்களில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லக்ஷ்மி மேனன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











