ஹாட் போட்டோ கேட்ட ரசிகர்கள்.. கெட்ட வார்த்தையால் திட்டிய குடும்ப குத்து விளக்கு நடிகை!
சென்னை: தன்னிடம் ஹாட் போட்டோக்களை கேட்ட ரசிகர்களை நடிகை லக்ஷ்மி மேனன் கெட்ட வார்த்தையால் விளாசியுள்ளார்.
மலையாள நடிகையான லக்ஷ்மி மேனன் தமிழில் சுந்தரப்பாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தார்.
கடைசியாக 2016ஆம் ஆண்டு றெக்க படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார் லக்ஷ்மி மேனன். அதன் பிறகு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார்.

நேரடியாக டிவியில்..
இந்நிலையில் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபுவுடன் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்தார் லக்ஷ்மி மேனன். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆனது.
குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து வரும் லக்ஷ்மி மேனன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சர்ச்சைக் கருத்துகள்
மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது போல்
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லக்ஷ்மி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல் வெளியானது.

டாய்லெட் கழுவ முடியாது
இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய லக்ஷ்மி மேனன், யார் வீட்டு டாய்லெட்டையும் எச்சில் தட்டையும் என்னால் கழுவ முடியாது என்றார்.

சர்ச்சையில் சிக்கும் நடிகை
அதனைக் கேட்ட ரசிகர்கள் எல்லாவற்றையும் கழுவாமல்தான் பயன்படுத்துவீர்களா என்று கேட்டு விளாசினர். இதேபோல் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு ஆவேசமாக பதில் கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

கெட்ட வார்த்தையால்
இந்நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை லக்ஷ்மி மேனன். அதாவது தன்னிடம் ஹாட் போட்டோக்களை கேட்கும் ரசிகர்களை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்.

கேள்வியால் போர்
அதாவது உங்களின் ஹாட் பிக்ஸ் என்று கேட்டிருப்பதை குறிப்பிட்டுள்ள லக்ஷ்மி மேனன் தன்னிடம் ஒரே மாதிரியான கேள்விகளை கேட்பதால் போரடிக்கிறது என்று கெட்ட வார்த்தையை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் லக்ஷ்மி மேனன்.

ரசிகர்கள் செம ஷாக்
லக்ஷ்மி மேனனின் இந்த அதிரடி பதிலை பார்த்த ரசிகர்கள் செம ஷாக்காகியுள்ளனர். படத்தில் மட்டும் பாவாடை தாவணி என டீசன்ட்டாக நடிக்கும் லக்ஷ்மி மேனன், இப்படி பேசுகிறாரே என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











