என்னையே செலக்ட் செய்திருக்கிறாரே.. அவர் டேஸ்ட் எப்படி இருக்கும்?.. கணவர் பற்றி லட்சுமி ஓபன் டாக்
சென்னை: நடிகை லட்சுமி 70கள், 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சிவக்குமார் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததை அடுத்து குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது மகள் ஐஸ்வர்யாவும் ஹீரோயினாக நடித்து பிறகு குணசித்திர வேடத்தில் நடித்தவர். கடந்த சில வாரமாகவே லட்சுமி பற்றிய பேச்சு சமூக வலைதளங்களில் அதிகம் அடிபட்டது. இந்தச் சூழலில் அவர் தனது கணவர் குறித்து அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழில் 1968ஆம் ஆண்டு வெளியான ஜீவானம்சம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் லட்சுமி. அந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதேவருடத்தில் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பே இருந்தது. பிறகு மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் லட்சுமி. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்று பெயரை பெற்றார்.

தொடர்ந்து ஹீரோயின்: பல மொழிகளில் கவனம் செலுத்தி ஹீரோயினாக நடித்த அவர் 1977ஆம் ஆண்டு நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். சிவக்குமார் உள்ளிட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த அவருக்கு ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி அவர் நடித்த ஜீன்ஸ், படையப்பா, ரிதம் உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று திருமணங்கள்: லட்சுமி முதலில் பாஸ்கரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஐஸ்வர்யா பிறந்தார். ஐஸ்வர்யாவும் ஹீரோயினாக நடித்து பிறகு குணசித்திர நடிகையாக மாறியவர். பாஸ்கரனை பிரிந்த அவர்; அடுத்து நடிகர் மோகன் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து பிறகு பிரிந்தார். கடைசியாக நடிகர் சிவசந்திரனை திருமணம் செய்துகொண்டு இப்போது அவருடன் வாழ்ந்துவருகிறார். சில நாட்களுக்கு முன்புகூட பயில்வான் ரங்கநாதன் இந்த விவாகரம் பற்றி பேசி விவாதத்தை பற்ற வைத்திருந்தார்.
லட்சுமி பேட்டி: இந்நிலையில் தனது கணவர் சிவசந்திரன் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு லட்சுமி அளித்த பேட்டி ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "இன்றும் நான் சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பதற்கு காரணம் இறைவனின் அருள்தான். எனக்கு எதற்கும் பயம் வந்ததே கிடையாது. சாவு இருக்கும்பட்சத்தில்தான் பயம் வரும். யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் மேலே சென்றுதானே ஆக வேண்டும். பயம் வந்துவிட்டால் நீங்கள் வாழ்வதே வேஸ்ட்டாகிவிடும்.
அழகாக பார்த்துக்கொள்ள வேண்டும்: நம்மை நாம்தான் அழகாக பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி பார்த்துக்கொள்ளும்பட்சத்தில் அது நம்முடைய பலமாக இருக்கும். ஒரு பெண்ணுக்கு ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம் என்பது என்னுடைய கருத்து. ஒருகட்டம்வரையில் என்னுடைய வாழ்க்கையில் நான் சுதந்திரமானவளாக இருந்ததில்லை. சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் சுதந்திரமாக இருந்தேன்.
நிறைய தூரம் பயணம்: நானும் என்னுடைய கணவரும் (சிவசந்திரன்) இறைய தூரம் பயணம் செல்வோம். ஆரம்பத்தில் எல்லாம் இங்கிருந்து பெங்களூருவுக்கு காரில் சென்று காலை உணவை அங்கே முடித்துவிட்டு பிறகு பயணித்து சென்னையில் மதிய உணவை சாப்பிடுவோம். இன்றுவரை என்னுடைய புடவைகளை அவர்தான் செலக்ட் செய்கிறார். முன்பெல்லாம் என்னுடைய அம்மா அதை செய்துகொண்டிருந்தார். எனது கணவர் ரொம்பவே அழகான ஆடைகளை எனக்காக தேர்வு செய்வார்.
அவருக்கு தெரியும்: கேமராவுக்கு எது நன்றாக இருக்கும் என்பது அவருக்கு தெரியும். அவருக்கு எனது டேஸ்ட் என்னவென்பதும் தெளிவாக தெரியும். ஏனெனில் அவர் என்னையவே செலக்ட் செய்திருக்கிறார் என்றால் அவருக்கு அப்படியான ஒரு டேஸ்ட்தானே இருக்கும். எனக்கு நகைகள் மீது பெரிய விருப்பம் கிடையாது. ஆனால் என்னுடைய டயட், உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றில் ஆர்வம் அதிகம். ரொம்பவே கறாராக இருப்பேன். அழகு என்பது நமது உள்ளிருந்து வரவேண்டும். மேக்கப்பால் மட்டும் வந்துவிடாது" என்றார்.


Click it and Unblock the Notifications











