Actress Lakshmi: இதுவரை கணவருடன் சண்டை போட்டதே இல்லை… நடிகை லட்சுமி மனம் திறந்த பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக லட்சுமி, தனது சினிமா வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பேட்டியில் கூறியுள்ளார்.

70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக இருந்த லட்சுமி, சில நேரங்களில் சில மனிதர்கள், நெற்றிக்கண், தில்லுமுல்லு, விசு இயக்கத்தில் சம்சாரம் அது மின்சாரம் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

Actress Lakshmi opens up about her film career

தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி, 2009ம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் தென்படாமல் இருந்தார். நீண்ட ஆண்டுகளுக்குபின் அமேசான் பிரைமில் வெளியான ஸ்வீட் காரம் காபி என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.

லட்சுமி பேட்டி: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் பள்ளியில் படிக்கும் போதே நடிப்பு சரியாக வராது. நாடகத்தில் சரியாக நடிக்க மாட்டேன். ஆனால், நடனம், பாட்டு என்றால் விரும்பி செய்வேன். என் முதல் படமான ஜீவனாம்சம் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் யாரு இந்த பெண்ணு, இந்த பெண்ணுக்கு நடிக்கவே வராது, போய் கிளப் டேன்ஸ் ஆட சொல்லுங்க என்று சொல்லிவிட்டார்.

முதல் சம்பளம்: என்ன முகத்திற்கு நேரா இப்படி சொல்லிட்டாங்களே என்று வருத்தப்பட்டேன். அப்போது சௌவுகார் ஜானகி அவங்ககிட்ட போய் சொன்னேன். அவங்க உனக்கு என்ன செய்ய தோணுதோ அதை செய் என்று சொன்னார்கள். அதன் பிறகு தான் எப்படியாவது நல்ல நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த படத்திற்காக நான் வாங்கிய முதல் சம்பளம் ரூ. 2100.

Actress Lakshmi opens up about her film career

நானும் என் கணவரும்: நான் எப்போதும் சிரித்துக்கொண்டுதான் இருப்பேன், எனக்கு அழும் காட்சியை படமாக்கினாலே பிடிக்காது சிரிக்க சொன்னால் நாள் முழுக்க சிரிந்துக்கொண்டே இருப்பேன். வீட்டில் நானும் என் கணவரும் எப்போதும் சிரித்துக்கொண்டே தான் இருப்போம். அவர் விடிய விடிய என்னை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.

சண்டையே வந்தது இல்லை: திருமணமாகி 37 வருஷம் ஆகி விட்டது, எனக்கும் என் கணவருக்கும் இதுவரை சண்டையே வந்தது இல்லை. பல விஷயங்கள் குறித்து இருவரும் கலந்து பேசித்தான் முடிவு எடுப்போம். எனக்கு சினிமா பற்றியும் மற்ற விஷயங்கள் பற்றியும் ஓரளவுக்கு புரிதல் இருக்கிறது என்றால் அது அவரால் தான். அவர் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டே இருப்பார். என்னையும் அந்த புத்தகம் படி என்று சொல்லுவார் என்று தனது கணவர் சிவச்சந்திரன் குறித்து பல விஷயங்களை லட்சுமி அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X