தலைமறைவு டிவி நடிகைக்கு இடைக்கால ஜாமீன்.. ஷூட்டிங் இருப்பதால் 6 ஆம் தேதிவரை கைது செய்யக் கூடாது!
கொச்சி: தலைமறைவாக உள்ள டிவி நடிகைக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.
கொல்லம் அருகே கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ராம்ஸி(24). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் காதலித்து வந்தனர்.
இது இரண்டு பேர் குடும்பத்துக்கும் தெரிய வந்தபோது, திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர்.

காதலை முறித்தார்
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இந்நிலையில், ஹாரிஸுக்கு வசதியான இடத்தில் இருந்து மாப்பிள்ளை கேட்டு வந்துள்ளனர். சொத்து மற்றும் பண ஆசையில் மயங்கிய ஹாரிஸ், ராம்ஸியுடனான காதல் உறவை முறித்தார்.

ராஸ்மியின் காதலர்
திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த ராம்ஸி, கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், ராம்ஸியின் காதலர் ஹாரிஸை, தற்கொலைக்குத் தூண்டியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லட்சுமி பிரமோத்
இந்த வழக்கில் போலீசார் மேலும் விசாரணையை தொடங்கினர். ஹாரிஸின் சகோதரர் மனைவி, லட்சுமி பிரமோத். மலையாள டிவி சீரியல் நடிகையான இவர், ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இவரும் தற்கொலை செய்துகொண்ட ராம்ஸியும் நெருங்கிய தோழிகள். இருவரும் இணைந்து டிக்டாக்கில் ஆடி பாடி வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.

தலைமறைவு
இந்நிலையில், நடிகை லட்சுமி பிரமோத்திடமும் அவர் குடும்பத்தினரிடமும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரித்த மறுநாளில் இருந்தே நடிகையும் அவர் குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர். ஹாரிஸூடன் நெருக்கமாக இருந்த ராம்ஸி, கர்ப்பமாகி உள்ளார். அவரைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார் லட்சுமி
பிரமோத்.

போலி சான்றிதழ்
இதற்காக, தனியார் மருத்துவமனை ஒன்றில் போலியான திருமண சான்றிதழை ஏற்பாடு செய்து கொடுத்தாராம் நடிகை லட்சுமி பிரமோத். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் முன் ஜாமீன் கேட்டு கொல்லம் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

படப்பிடிப்பு இருப்பதால்
அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. டிவி படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் அக்டோபர் 6 ஆம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











