Lakshmi rai: எழுந்து நிற்கக்கூட முடியல.. நடக்க முடியாமல் தவிக்கும் லட்சுமி ராய்.. பதறிய ரசிகர்கள்!
சென்னை: நடிகை லட்சுமி ராய் எழுந்துக்கூட நிற்கமுடியாமல் தவிக்கும் வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.

மாடல் அழகியான ராய் லட்சுமி சினிமாவில் நுழைவதற்கு முன்பே புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்திருந்தார்.
விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே ஆர்.வி உதயக்குமார் இயக்கிய கற்க கசடற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
நடிகை லட்சுமி ராய்: அந்த படத்தில் விக்ராந்த்துடன் ஜோடியாக அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்வியைத் தழுவியது. இதனால், தமிழில் படவாய்ப்பு இல்லாமல் போனதால் தெலுங்கு பக்கம் படவாய்ப்பை தேடி சென்றார். அங்கு, காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அடுத்தடுத்த படத்தில்: இதன்பின் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்திலும், முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இவற்றில் எந்த திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரவில்லை. திறமையும் அழகும் இருந்தும், சரியான கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவில் உயரத்தை தொட முடியவில்லை.
கவர்ச்சி நடனம்: பாலிவுட் பக்கம் சென்ற லட்சுமி ராய், பட வாய்ப்பு இல்லாததால், படத்தின் பாடல் காட்சிக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டு வருகிறார். அண்மையில் தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாத ராய் லட்சுமி மலையாளத்தில் டிஎன்ஏ என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் பாய்சன் 2 என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

பதறிப்போன ரசிகர்கள்: இந்நிலையில், நடிகை லட்சுமி ராய் மும்பை விமான நிலையத்தில் நடந்து வரக்கூட முடியாமல் தட்டுத்தடுமாறி நடந்து வந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் என்ன ஆனது என்று கேட்டு வருகின்றனர். மேலும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











