உங்க வேலைய பாருங்க.. என் குடும்ப விஷயத்த பேசாதீங்க.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் எகிறிய வனிதா!
சென்னை: தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனை வனிதா விஜயக்குமார் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த சனிக்கிழமை விஷுவல் எடிட்டரான பீட்டர் பாலை காதல் திருமணம் செய்தார். மகள்களின் சம்மதத்துடன் அவர்களே மணப்பெண் தோழியாக இருந்தனர்.
திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பேசு பொருள்
இதனால் வனிதா திருமணம் தற்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் நடிகை, இயக்குநர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்ட லக்ஷ்மி ராம கிருஷ்ணன் வனிதாவின் திருமணம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
அதாவது நான் உண்மையில் நம்பிக்கையுடன் இருந்தேன், அவர் இந்த உறவில் நன்றாக நிலைத்திருப்பார், அவர் கடினமான காலங்களை கடந்துவிட்டார், அவளுடைய அனுபவங்களைப் பற்றி குரல் கொடுத்தார். அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினர், ஆனால் அவள் இந்த பகுதியை கவனிக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறது !!! என பதிவிட்டிருந்தார்.

எப்படி இப்படி திருமணம்?
மற்றொரு டிவிட்டில் இப்போது தான் நான் செய்திகளைப் பார்த்தேன் !! அந்த மனிதர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். விவாகரத்து செய்யவில்லை !!! கல்வியும் வெளிப்பாடும் உள்ள ஒருவர் எப்படி இத்தகைய தவறு செய்ய முடியும்? !! அதிர்ச்சி !!! வனிதா - பீட்டர் திருமணம் முடிவடையும் வரை முதல் மனைவி ஏன் காத்திருந்தார், ஏன் அதை நிறுத்தவில்லை? என கேட்டிருந்தார்.

விவாகரத்து இல்லாமல்
வனிதா பீட்டர் பற்றி விவாதிப்பதை நிறுத்த முடியுமா? சட்டபூர்வமான விவாகரத்து இல்லாமல் மறுமணம் செய்வதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருப்பதால் எனது கருத்தை ட்வீட் செய்தேன். துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை அல்லது தந்தை மற்றும் மகனின் சமீபத்திய மரணம் போன்ற மிக முக்கியமான பிரச்சினையை நான் தொடும்போது, எனக்கு அவ்வளவு பதில் கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

உங்க வேலைய பாருங்க
லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த வனிதா செம காண்டாகியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தற்கொலை பற்றி பேசும் உங்களின் வேலையை பாருங்கள். குடும்ப பிரச்சினைகளை அவர்களின் அனுமதியின்றி விவாதிப்பதை நிறுத்துங்கள் என காட்டமாக டிவிட்டியுள்ளார்.

குற்றம்சாட்டக்கூடாது
இதனை தொடர்ந்து டிவிட்டிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன், எனக்கு ஒரு தாழ்மையான கோரிக்கை உள்ளது, நாம் விவாதத்தை தனிப்பட்ட விஷயத்தில் சட்ட மற்றும் சமூக கோணத்தில் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஒருவரை பற்றி நாம் தீர்ப்பளிக்கவோ முத்திரை குத்தவோ கூடாது, அது நியாயமில்லை. நீங்கள் விவாதிக்கும்போது டிஸ்கஸ் செய்யும்போது ப்ளீஸ் கண்ணியத்தை மேற்கொள்ளுங்கள். தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கேரக்டரை குற்றம்சாட்டக்கூடாது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











