நேர்காணலில் தரக்குறைவாக பேசிய வனிதா.. லீகல் நோட்டீஸ் அனுப்பினார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!
சென்னை: நேர்காணலில் தன்னைப்பற்றி ஆபாசமாக பேசிய நடிகை வனிதாவுக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Recommended Video
கடந்த வாரம் ஊடகம் ஒன்றின் நேர்க்காணலில் நடிகை வனிதாவும் நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் பங்கேற்றனர்.
அப்போது பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக பேசியதாக நடிகை வனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சரமாரியாக விளாசினார்.

கெட்ட வார்த்தைகள்
அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் போடி வாடி என படு கேவலமாக பேசினார். கெட்ட வார்த்தைகளை கொட்டி தீர்த்த வனிதா, நீ என்ன பத்தினியா என்றும், செருப்பு பிஞ்சுரும் என்றும் படு மோசமாக பேசினார். சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.

வலைதளங்களில்..
அதோடு லக்ஷ்மியின் கணவரான ராமகிருஷ்ணனையும் படு கேவலமாக பேசினார். மேலும் அந்த வீடியோக்களை எல்லாம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் அவரை விளாசி வந்தார்.

வனிதாவுக்கு நோட்டீஸ்
இந்நிலையில் லக்ஷ்மியும் அவரது கணவரும் வனிதா விஜயக்குமாருக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் வனிதா விஜயக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனை தனது அறிக்கையின் மூலம் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தாக்கி பேசியிருந்தார்
அதில் கூறியிருப்பதாவது, Nian media private ltd நிறுவனத்திற்கு சொந்தமான யூ டியூப் சேனல்
ஏற்பாடு செய்திருந்த Skype நேர்க்காணலின் போது வனிதா விஜயக்குமார் என்னையும் எனது கணவரையும் அநாகரிக வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயக்குமார் தான் அந்த சேனலை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார்.

வழக்கறிஞர் மூலம்
ஆனால் நேர்க்காணலில் வேண்டுமென்றே தவறாக பேசினார். பின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து நானும் எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயக்குமாருக்கு குற்றவியல் (Criminal) மற்றும் உரிமையியல் (civil) சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

நோட்டீஸின் நகல்
அதன்படி இன்ஸ்பெக்டர், அனைத்து பெண்கள் காவல் நிலையம், வடபழனி & எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையம், துணை போலீஸ் கமிஷனர், வடபழனி, காவல்துறை உதவி ஆணையர் மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் (mahila Ayog) ஆகியோருக்கும் நோட்டீஸின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











