ஸ்ரீரெட்டி குறித்து நான் எதற்கு பேச வேண்டும்? சீனியர் நடிகை பாய்ச்சல்!
நடிகை ஸ்ரீரெட்டி குறித்து நான் ஏன் பேச வேண்டும் என நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கடுப்பாகி உள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி குறித்து நான் ஏன் பேச வேண்டும் என நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கடுப்பாகி உள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டியின் பெயரைக் கேட்டாலே தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சியடைகின்றனர். காரணம் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அப்படி.
தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி தமிழ் இயக்குநர்களான ஏஆர் முருகதாஸ், சுந்தர் சி நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோரும் தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார் ஸ்ரீரெட்டி.

லட்சுமி ராமகிருஷ்ணன்
இதனால் அடுத்து அவர் யார் பெயரை கூறப்போகிறாரோ என்ற பீதி எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

நான் பேச மாட்டேன்
அப்போது அவரிடம் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காட்டமாக பேசிய அவர் ஸ்ரீரெட்டி குறித்து நான் எதுவும் பேச மாட்டேன் என தடாலடியாக கூறினார்.

கேவலமாக பேசுகிறார்கள்
சாதாரண பெண்ணுக்கு இதுபோன்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு அதை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமர்ந்து பேசினால் அதை கேவலமாக பேசுகிறார்கள். அதுவே ஒரு நடிகைக்கு நடந்துவிட்டால் அக்கறை வந்துவிடுகிறது.

அக்கறை வந்துவிட்டது
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சாதாரண பெண்கள் கஷ்டப்படும் போது அதை எல்லோரும் கேவலமாக பேசினார்கள். இப்போது ஸ்ரீரெட்டி நடிகை என்றதும் எல்லோருக்கும் அக்கறை வந்துவிட்டது.

இது என்ன நிலைப்பாடு?
இது என்ன நிலைப்பாடு? என காட்டமாக கேள்வி எழுப்பினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனைகள் குறித்து பஞ்சாயத்து செய்து வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications