கூலிங் கிளாஸ்.. ஓவர் கோட்.. ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. லட்சுமி ராமகிருஷ்ணனின் போட்டோஸ்!

சென்னை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கதாநாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் குடும்பத்தில் ஒருவராக மாறிப்போனார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

குடும்ப பிரச்சனைகள், தகாத உறவு போன்றவற்றை மேடைபோட்டு விளாசிய லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதிர்ப்புகள் எழுந்த போதும், அந்த நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

ஆடை வடிவமைப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு ஓமனில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் பிஸினஸை நடித்தி வந்துள்ளார். இந்தியா திரும்பியதும் திரைப்படங்களில் நடிக்கவும், இயக்குனராகவும் பணியாற்றினா. சக்கரமுத்து என்ற மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

பின் தமிழில், கரு பழனியப்பன் இயக்கத்தில் உருவான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் சினேகாவின் அம்மாவாக தனது அறிமுகத்தை கொடுத்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த திரைப்படத்தை அடுத்து பொய் சொல்ல போறோம், நாடோடிகள், வேட்டைக்காரன், விண்ணைத்தாண்டி வருவாயா, பாஸ் என்கிற பாஸ்கரன் என பல திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை

படங்களில் பிஸியாக நடித்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை சுமார் 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தொகுத்து வழங்கி உள்ளார். என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்ற வசனம் இவரால் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது. நடிகை, இயக்குனர், என பன்முகத்தன்மை கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி,ஹவுஸ் ஓனர் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

வேறலெவல் போட்டோஸ்

வேறலெவல் போட்டோஸ்

தற்போது திரைப்படங்களில் இவர் தலைக்காட்டாமல் இருந்தாலும்,அவ்வவ்போது தனது கருத்தை வலுவாக சோஷியல் மீடியாவில் எடுத்துக்கூறி வருகிறார். தற்போது இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையை குறைத்து சும்மா சிக்குனு மாறிஉள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரது போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பாங்க போல என கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X