கழட்டிவிட்டு ஓடிய நடிகர்.. குழந்தையுடன் தவித்த நடிகை லட்சுமி.. கடைசியாக கை கொடுத்த நடிகர்!

சென்னை: எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை லட்சுமி. ஜீன்ஸ் படத்தில் பாட்டியாகவும், விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மருமகளாகவும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் லட்சுமி. ஒரு நடிகையாக இவர் ஜெயித்து இருந்தாலும், வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்துள்ளார். இதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகை லட்சுமி 1952ஆம் ஆண்டு யரகுடிபாடி வரதா ராவ் மற்றும் தாயார் குமாரி ருக்மணி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். தாய், தந்தை இருவருமே நடிகர்கள் என்பதால் லட்சுமிக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இயல்பிலேயே இருந்தது. இதனால் 7 வயதிலேயே ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லட்சுமி, தனது 17 வயதில் ஜீவனாம்சம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின், சட்டகரி என்கிற மலையாள திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த திரைப்படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, போன்ற பழமொழிகளில் வெளியானதைத் தொடர்ந்து லட்சுமி கொடிகட்டி பறந்தார். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேஷன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்து உள்ளார் லட்சுமி.

lakshmi Sivachandran life story
Photo Credit:

நடிகை லட்சுமி: அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த லட்சுமிக்கு 1969 ஆம் ஆண்டு பாஸ்கர் அய்யர் என்பவரை பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இவர் சென்னையில் ஒரு இன்சூரன்ஸ் கம்பேனியில் பணியாற்றி வந்தார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க கூடாது என்கிற கன்டிஷன் பேரிலேயே இந்த திருமணம் நடந்ததால், திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த லட்சுமிக்கு 1971ம் ஆண்டு ஐஸ்வர்யா பிறந்தார். சுதந்திர பறவையாக சுற்றித் திரிந்த லட்சுமிக்கு, வீட்டு வாழ்க்கை அலுத்துப்போக, மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது. இதுவே இவர்களின் வாழ்க்கையில் புயலாக மாறி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

மனவேதனையில் லட்சுமி: விவாகரத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்த லட்சுமி, சட்டகரி படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த மோகன் சர்மா மீது காதல் வயப்பட்டுள்ளார். விவாகரத்து பெற்ற அடுத்த ஆண்டே, இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்கினார்கள். ஆனால், அந்த திருமண வாழ்க்கை ஐந்து ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. லட்சுமியின் வீட்டில், ருக்மணி அம்மா, லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா என அனைவரும் இருந்ததால், அவர்களுடன் ஒத்துப்போக முடியாத மோகன் சர்மா, திடீரென ஒரு நாள் ஒரு பெட்டியில் துணியை எடுத்துக்கொண்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால், துடித்துப்போன லட்சுமி, அவருடன் சமரசம் பேசியும், கெஞ்சி அழைத்தும் மோகன் சர்மா வீட்டிற்கு வரவில்லை.

3வது திருமணம்: இரண்டு திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்ததால், துவண்டு போன லட்சுமி, மீண்டும் படத்தில் கவனம் செலுத்தினார். அப்போது தான், என் உயிர் கண்ணம்மா படத்தின் இயக்குநர் சிவசந்திரன் மீது காதல் வந்துள்ளது. இதையடுத்து, இருவரும் 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 38 வருடமாக இருவரும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால், சம்யுக்தா என்ற பெண்னை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள். லட்சுமியின் முதல் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் மில் தொழிலாளி என்கிற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X