உங்களுக்கு ஒரு 15.. அவங்களுக்கு ஒரு 15.. கொரோனா தடுப்புக்காக 30 லட்சத்தை அள்ளிக் கொடுத்த நடிகை!
சென்னை: கொரோனா தடுப்புக்காக மத்திய மாநில அரசுகளுக்கு நடிகை லதா 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகமே முடங்கி உள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரஸால், இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் 2000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே கொரோனா தடுப்புக்காக மக்கள் உதவ வேண்டும் என மத்திய மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இதனைத் தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் மத்திய அரசுக்கும் அவரவர் மாநில அரசுக்கும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் பழம் பெரும் நடிகையான லதாவின் குடும்பத்தினர் சார்பில் அவரது சகோதரர் ராஜ்குமார் சேதுபதி, அவரது மனைவியும் நடிகையுமான ஸ்ரீப்ரியா குடும்பத்தினர் மத்திய அரசுக்கு 15 லட்சம் ரூபாயும் தமிழக அரசுக்கு 15 லட்சம் ரூபாயும் நிதி வழங்கியுள்ளனர். 15 லட்சத்திற்கான காசோலையை தலைமை செயலாலர் சண்முகத்திடம் நடிகை லதா வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











