நடிகர் குணால் கொலை வழக்கில் நடிகை லவீனா கைது

காதலர் தினம் படத்தில் அறிமுகமான குணால், புன்னகைதேசம், பார்வை ஒன்றே போதுமே, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் நடித்தார். இவரது தந்தை ராஜேந்திரா ஒரு ராணுவ அதிகாரி.
போஜ்புரி மொழிப் படங்கள் சிலவற்றிலும், ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். மும்பை ஓஷிவாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் குணால்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது மனைவி, குழந்தைகள் யாரும் வீட்டிலில்லாத நேரத்தில் குணால் மர்மமான முறையில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து வெர்சோவா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதலில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின்னர் குணாலின் தந்தை மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
தன் மகன் கொலையில் சந்தேகங்கள் இருப்பதையும், தற்கொலை சொய்து கொண்ட அவரது உடலில் காயங்கள் இருப்பதையும் குறிப்பிட்டு விசாரணை நடத்தக் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த கோர்ட்டு, குணால் மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் போலீசாருக்கு உத்தரவிட்டது.
லவீனா பாட்டியா...
அதைத் தொடர்ந்து குணால் மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மும்பை வெர்சோவா போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் குணால் கொலை தொடர்பாக, அவரது நெருங்கிய தோழியும், இந்தி நடிகையுமான லவீனா பாட்டியாவை போலீசார் கைது செய்தனர்.
குணால் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சமயத்தில், நடிகை லவீனா பாட்டியா அங்கு இருந்தார் என்று முன்பே விசாரணையில் தெரிய வந்திருந்தது.
ஆனால் அப்போது அவரைக் கைது செய்யாமல் விட்டிருந்த போலீசார், இப்போது கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











