'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!

By

கொச்சி: தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வந்த தகவலை பிரபல நடிகை மறுத்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை லேனா. ஏப்ரல் ஃபூல், காக்டெயில், டிராபிக், உஸ்தாத் ஓட்டல்

உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

அனேகன் மருத்துவர்

அனேகன் மருத்துவர்

தமிழில், தனுஷின் அனேகன் படத்தில் மருத்துவர் ராதிகாவாக நடித்திருந்த இவர், திரெளபதி படத்திலும் டாக்டராக நடித்திருந்தார். மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார். அப்போது பெங்களூர் விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா

அப்போது அவருக்கு, உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் இதனால் ஓட்டல் ஒன்றில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த தகவலைக் கேள்விபட்ட நடிகை லேனா அதிர்ச்சி அடைந்தார்.

பரிசோதனை

பரிசோதனை

இந்த செய்திகளை மறுத்துள்ள நடிகை லேகா, கூறியிருப்பதாவது: இங்கிலாந்தில் இருந்து வருபவர்களுக்கு வழக்கமாக நடைபெறும் கொரோனா பரிசோதனை எனக்கும் நடத்தப்பட்டது. பெங்களூரு அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா இல்லை.

பகிர வேண்டாம்

பகிர வேண்டாம்

இருந்தும் நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனால், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தவறான தகவல், சில இணையதளங்கள் மூலம் பரபரப்பட்டு வருகிறது. அதை ரசிகர்கள் பகிர வேண்டாம். என் மீதான உங்கள் அக்கறைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X