லிப் டூ லிப் கிஸ் கொடுத்த ஜெய்பீம் பட நடிகை.. காதல் என்பது பொதுவுடமை படத்தின் விவகாரமான போஸ்டர்!

சென்னை : காதல் என்பது பொதுவுடமை படத்தின் விவகாரமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள நடிகையான லிஜோமோல் 2016ம் ஆண்டு மகேஷின்டே பிரதிகாரம் என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். இதையடுத்து, கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன் மற்றும் ஹனி பீ 2.5 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின் சித்தார்த், ஜிபி பிரகாஷூடன் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த்தின் மனைவியாக நடித்திருந்தார். அக்கா, தம்பி பாசத்தை பற்றிய இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.

சூர்யாவின் ஜெய்பீம்

சூர்யாவின் ஜெய்பீம்

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் படத்தில் லிஜோமோல் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இவரின் கதாபாத்திரத்தைச் சுற்றியே படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது. நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. 'இதில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

செங்கேணியாக கலக்கிய லிஜோமோல்

செங்கேணியாக கலக்கிய லிஜோமோல்

நடிகை லிஜோமோல் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதை விட,அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ராஜாக்கண்ணு, செங்கேணி என்ற பழங்குடியின தம்பதிகள், உயர் சாதியினர் ஏற்படுத்தும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதை படம் எடுத்துக்காட்டி இருந்தது.

இரண்டு பெண்கள் லிப் கிஸ்

இரண்டு பெண்கள் லிப் கிஸ்

ஜெய்பீம் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த லிஜோமோல், காதல் என்பது பொதுவுடமை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு காதலர் தினமான இன்று வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், இரண்டு பெண்கள் படுக்கை அறையில் முத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் செங்கேணியா இது என கேட்டு வருகின்றனர்.

காதல் என்பது பொதுவுடமை

காதல் என்பது பொதுவுடமை

தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை தயாரித்த ஜியோ பேபி தயாரிப்பில் உருவாகி காதல் என்பது பொதுவுடமை படத்தை லென்ஸ் மற்றும் தலைகோதல் படத்தை இயக்கிய ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் லிஜோமோல், ரோகிணி, வினித், அனுஷா மற்றும் தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காதல் இரண்டு மனம் சார்ந்தது

காதல் இரண்டு மனம் சார்ந்தது

காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள ஜோதிகா, காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல, அது இரண்டு மனம் சார்ந்தது என தெரிவித்துள்ளார். நடிகை ஜோதிகா மம்முட்டியுடன் இணைந்து காதல் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X