மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகைக்கு 2 மாதம் சிறை.. தண்டனையை கேட்டதும் கண்ணீர் விட்டு கதறல்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
பிரபல ஹாலிவுட் நடிகை லோரி லாஹ்லின். ஏராளமான ஹாலிவுட் படங்களிலும் டிவி சிரியல்களிலும் நடித்துள்ளார்.
தி நியூயார்க் கிட்ஸ், சீக்ரெட் அட்மைரர். ராட், பேக் டு த பீச். கிரிட்டிக்கல் மாச், சக்கர்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இரண்டு மகள்கள்
கடைசியாக 2013 ஆம் ஆண்டு வெளியான கிராள்ஸ்பேஸ் என்ற ஹாரார் படத்தில் நடித்திருந்தார். இவர் தனது முதல் கணவர் 1996 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். பின்னர், டிசைனரான மொஸிமோ கியானுள்ளி (Mossimo Giannulli) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இஸபெல்லா ரோஸ், ஓலிவியா ஜேட் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

நுழைவு தேர்வு மோசடி
கடந்த ஆண்டு, அமெரிக்காவில் நடந்த கல்லூரி நுழைவு தேர்வில் மோசடி நடந்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக 50 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் நடிகை லோரி லாஹ்லினும் அவர் கணவரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி புகார் எழுந்த போது, தங்கள் மகள் மீதான பாசத்தால் மோசடியில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

2 மாத சிறை
இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் நடிகை லோரி லாஹ்லினுக்கு 2 மாத சிறைத் தண்டனையும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. நூறு மணி நேரம் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது கணவருக்கு 5 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கண்ணீர் விட்டு அழுதார்
2 லட்சத்து 50 ஆயிரம் டால்டர் அபராதமும் 250 மணி நேரம் சமுதாய பணிகளை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்பார்க்காத நடிகை கண்ணீர் விட்டு அழுதார். இதற்காக மன்னிப்புக் கேட்ட அவர், 'என் குழந்தைகள் மீதான அன்பால் இதை செய்வதாக நினைத்தேன். ஆனால் அவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக உணர்கிறேன் என்றார். இந்த தீர்ப்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











