கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல்.. ஸ்கின் லேப்புக்கு விளம்பரம் செய்யும் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகை லாஸ்லியா ஸ்கின் லேபுக்கு விளம்பரம் செய்யும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏற்கனவே ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தில் நடித்துள்ள லாஸ்லியா அடுத்து ஆரியின் படம் உட்பட 2 படங்களில் கமிட்டானார்.

தர்ஷனுக்கு ஜோடியாக
மேலும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும் படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் லாஸ்லியா. இதற்கான பூஜைகள் நடைபெற்று போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

சமூக வலைதளங்களிலும் விளம்பரம்
படங்களில் கமிட்டான போதும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் லாஸ்லியா. குக் வித் கோமாளி அஷ்வினுடன் லாஸ்லியா சோப் விளம்பரம் ஒன்றில் நடித்தார். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வரும் லாஸ்லியா, அங்கேயும் விளம்பர பணியை தொடருகிறார்.

ஸ்கின் லேப் விளம்பரம்
அழகு சாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் பேசி பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. அந்த வகையில் தற்போது ஸ்கின் லேப் ஒன்றை விளம்பரப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video

மேக்கப் இல்லாமல்
இதில் வெள்ளை நிற நீண்ட கவுன் அணிந்துள்ள லாஸ்லியா, ஃபிரி ஹேரில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் உள்ளார். இதேபோல் தான் தன்னுடைய ஃபேவரைட் லிப் பாம் என்று பீட் ரூட் லிப் பாம்மை கையில் வைத்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார் லாஸ்லியா.


Click it and Unblock the Notifications











